உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ.103-வது நாவல்

114

தர்கள் ஆகிய பலர் கும்பல் கும்பலாக, சிலர் துரைக்கண்ணன் வீட்டிற்கும், சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சிலர் ஸ்ரீதரன் வீட்டிற்குமாய் ஓடிச் சென்றார்கள். ஏற்கெனவே தன் கணவன் விஷயமாய் மனமுடைந்து, கேவலப்பட்டுத் தவித்துக் கொண்டுள்ள கமலவேணியம்மாள் காதில் இந்த வார்த்தைகள் விழுந்ததுதான் தாமதம், “ஹா… என் மகனா! கொலைக் குற்றவாளியாகி, கைதியாகி விட்டானா, என் ஸ்ரீதரன்!… என் கண்மணி டாக்டர் ஸ்ரீதரனா! சத்யசந்தனாகிய ஸ்ரீதரனா? மகா த்யாகியும், சிறந்த ஞானியுமாகிய ஸ்ரீதரனா கொலையாளி! ஸ்ரீதரனா கொலையாளி,” என்று தன்னை மறந்து கதறியபடியே, வீதியில் ஓடத் துடங்கி விட்டாள். பாவம். எங்கு போகிறோம், என்ன செய்கிறோம், என்பதே அவளுக்குத் தெரியாது தடுமாற்றமான நிலைமையில், அவளுடைய பெண்களும், மற்றவர்களும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து, வீட்டில் படுக்க வைத்தார்கள். அவளை எத்தனை அடக்கியும், அடங்காத வெறி பிடித்த நிலைமை உண்டாகியதால், “எங்கே என் ஸ்ரீதரன்? என் ஸ்ரீதரனைக் கைது செய்த போலீஸ்காரன் எங்கே? அவனைக் கொன்று விடுகிறேன், குத்தி விடுகிறேன். என் ஸ்ரீதரனா கொலைகாரன், என் ஸ்ரீதரனா குற்றவாளி” என்று மறுபடியும் கத்தியவாறு வீதிக்கு ஓடுகிறாள்.

“அந்த ப்ரபுவின் வீட்டிற்கு என்னை அழைத்துப் போங்கள்; என்னை இங்கு தவிக்கச் செய்ய வேண்டாம்; நான் உடனே என் ஸ்ரீதரனைப் பார்க்க வேண்டும்;” என்று கத்துவதைக் கண்டு, ஊர் ஜனங்களின் மனம் உருகிக் கண்ணீர் வழிந்தது.

இவர்களுக்குத் தெரிந்த ஒருவர், உடனே காரில் இந்தம்மாளையும், சகோதரிகளையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றார். தாயின் தவிப்பும், பெத்த வயிற்றின் துடிதுடிப்பும், கைம்மாறு கருதாத தாயன்பின்