உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

சாந்தியின் சிகரம்

ஸ்ரீதர:- பேஷ்! தம்பீ! என் ஜென்மம் இன்றே சாபல்யமாயிற்று. நீ எந்த ராமசந்திரனாக என்னை பூஜிக்கிறாயோ! அது போல், உன்னைப் பரம பக்த சிகாமணியான பரதனாகவே நான் கருதுகிறேன். அண்ணன் இட்ட கட்டளைப்படியே பரதன்நடந்தான்; அது போல், நீயும் என் கட்டளைப்படியே நடக்க வேண்டும்; இது சத்யம். ஸ்ரீ ராமசந்திரன் மீது ஆணையாக, இது சத்யம்: உனக்கு நான் ப்ரமாண பூர்வமாய் கட்டளை இடுகிறேன். நீ அதீத ப்ரவ்ருத்தியில் இறங்கி, நம் தாயைக் கொலை செய்த பாதகத்தில் இறங்காதே. அவர்களை இப்போதே அழைத்துச் சென்று விடு. இனி என்னைப் பற்றி நினைக்கவே நினைக்காதே…

“அண்ணா! இதென்ன கொடிய தண்டனை, இப்படியா என்னை மடக்கி, வாய்ப்பூட்டுப் போடுவது? இதுவா எனக்கிடும் கட்டளை...” என்று பின்னும், ஏதேதோ சொல்ல வாயெடுத்த சமயம் போலீஸ்காரர்கள்... “ஸார்! இம்மாதிரி பேசிக் கொண்டு போவது சட்ட விரோதமாகும். தயவு செய்து, நீங்கள் விலகி விட வேண்டும். எங்கள் கடமைப்படி, எங்கள் வேலைகள் நடக்க வேண்டும். சந்தர்ப்ப சாக்ஷியமும், நேரடியான சாக்ஷியமும் எங்களுக்குக் காட்டும் உண்மைப்படி நாங்கள் செய்யக் கடமைபட்டிருப்பதால், இனி மேல், வீணாகப் புலம்பிப் புலம்பி, நேரத்தைக் கடத்த நாங்கள் அனுமதிக்க முடியாது. போய் விடுங்கள்.. அம்மணீ! இந்த இடத்திற்கு நீங்களேன் வர வேண்டும். இம்மாதிரியான பரிதாபகர காட்சியைக் கண்டு தவிப்பதைக் காண, நாங்களும் விசனிக்கிறோம். என்ன செய்வதம்மா! நீங்கள் வீட்டிற்குப் போய் விடுங்கள்,” என்று தனனையும் மறந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் கூறியதோடு, தாமோதரனையும் தேற்றினார்.

இனி அதிகம் கூறுவானேன்! அவர்களுடைய சட்டப்படிக்கு, மேலதிகாரிகள் வந்து சகல விசாரணையும் செய்து, பதிவாக்கிக் கொண்டு, ஸ்ரீதரனை மரியாதையாக அழைத்துச் செல்லும் சமயம், லேடீ டாக்டர் அலையக் குலைய ஓடி வந்து, கண்ணீர் விட்டுக் கலங்குவதைப் பார்த்த ஸ்ரீதரன்,