உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பலக்கூத்தன்

அம்பலக்கூத்தன் பெ. சிவபிரான். அனைத்து வேட மாம் அம்பலக்கூத்தனை (தேவா. 5,2,1) இரங் கும் நமக்கு அம்பலக்கூத்தன் (திருவாச. 21, 7). அம்பலக்கோடகம் பெ. கோடகசாலை என்னும் படர் பூடுவகை. (மரஇன .தொ.)

அம்பலகாரன் பெ. 1. ஊர்த் தலைவன். (பே.வ.) 2. ஊர் அவைத்தலைவன். (வட்.வ.) 3. கள்ளர், வலையர் பட்டப்பெயர். (தஞ்.வ.)

அம்பலச்சாவடி பெ. ஊர்ப் பஞ்சாயத்து மண்டபம்.

(செ.ப.அக.)

அம்பலத்தாடி பெ. சிவபிரான். அம்பலத்தாடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே (தேவா. 5, 1, 10). புனையும் அம்பலத்தாடி பொற்பாதமும் போற்றி (சூத. எக்கிய. பூருவ. 43, 44). அம்பலத்தாடியைக் கும்பிடவே (நந்த. கீர்த். ப.6).

அம்பலத்தாடிமடம் பெ. அழகிய சிற்றம்பலவன் கைப்பட எழுதிய திருவாசக ஏட்டைப் பெட்டகத்தில் வைத்துப் பூசிக்கும் புதுச்சேரியிலுள்ள திருமடம். (சமய வ.)

அம்பலத்தார் பெ. கிராமப் பொதுச்சபையார். நிலத்தை வலுக்கொண்டு அம்பலத்தார் எடுத்துழுது கொண் டார்கள் என்று (சரவண. பணவிடு. 185).

அம்பலத்தி! பெ. தில்லை மரம். (மலை அக./செ. ப. அக.)

அம்பலத்தி2 பெ. தான்றிக் காய். (வைத். விரி. அக. ப.

20)

அம்பலத்தோதிகம் பெ. செஞ்சதுரக் கள்ளி. (செ. சொ. பேரக.)

அம்பலநாட்டான் பெ. ஊர்த் தலைவன். கிராம முன் சீபு அம்பலநாட்டார் எவர்க்கும் (பஞ்ச.திருமுக.

380).

அம்பலப்படுத்து-தல் 5 வி. பலரும் அறியச் செய்தல். (இலங்.வ.)

அம்பலப்புறம் பெ.

சிவன் கோயிலுக்கு விடப்பெற்ற நிலம். (தெ.இ. கோ. சாசன.ப. 1393)

அம்பலம்' பெ. 1.பலர் கூடும் வெளியிடம். அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே (மணிமே. பதிகம் 67). அம்பலம் தோறும் ஆடி அலைவன் (நாஞ். மரு. மான். கடவுள். 8). 2. தங்குமிடம். புகலிட மாம் அம்பலங்கள் (தேவா.6,98,2).3.ஊர்ச்சபை. என்னை யிழுத்து அம்பலத்தே ஏற்றினாள் (தெய்வச். விறலி. தூது 483). மேரை கெட அம்பலத்தில் விட்ட