உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

148

துக்க சாகரத்தில் மூழ்கி விட்டார்கள். எல்லோரையும் விட, தாமோதரனே அதிகமாய்த் தவிக்கிறான். தனக்குப் பெண் பார்க்கச் சென்றதனால்தானே, இத்தகைய சங்கடம் உண்டாகியது என்பதை, அவனால் மறக்கவே முடியாது இதயம் வெடித்து விடும் போலாகி விட்டதால், உடல் மெலிந்து நோயாளியைப் போலாகி விட்டான்.

துரைக்கண்ணன் வீட்டில் சட்டப்படி போலீஸ் காவலுடன் பந்தோபஸ்து செய்திருப்பதால், யாரும் உள்ளே வர முடியாது. காவலிருக்கும் போலீஸ்காரனின் மனைவி சாப்பாடு கொண்டு வரும் போது, மிகவும் பயந்து நடுங்கியவாறு, வீதிப் பக்கத்துத் தோட்டத்திலேயே நின்று கூப்பிட்டுச் சாப்பாட்டைக் கொடுத்துப் பின், “இன்னாங்க! ராவுலே ஒரு பயமும் இல்லாமே இருக்குதுங்களா? என்னருந்தாலும் ரெண்டு கொலை நடந்த எடமாச்சே! அந்த ஆத்துமா இங்கேதானே சுத்தி அலையும்! அதெப் பார்த்துப் பயந்துக்க போறே!… இந்தா! நம்ப மாணிக்கப் பண்டாரத்துக் கிட்டே விபூதி மந்திரிச்சு வாங்கியாந்தேன். இந்தா! இதை நெத்திலே வச்சுக்கோ; பொட்டலத்தெ மடியிலேயே வச்சிருந்தா பயமே தெரியாதாம்…”

போலீ:-அட போயேன்! இந்த போலீஸ் உத்யோகத்திலே வந்தப்பரம் பயமாம்! பனங்காயாம்!… எத்தினி திருடன், எத்தினி கொலைக்காரன், எத்தினி பொணம், எத்தினி கத்திக் குத்து!… அடேயப்பா ! இதுக்கெல்லாம் அசங்காத அம்பலவாணனா, இந்த சுண்டக்கா கொலைக்கி பயந்துடப் போறேன் ! ஏய்! நீ சும்மா சும்மா இதெப் பத்தி தொணதொணன்னு பேசி, நீயே காபுரா பண்ணாதே…

மனைவி:- ஆமாம்! நானு காபுரா பண்ணத்தான் வந்திருக்கேனாங் காட்டியம்!… நேற்று மூலத்தெரு பீட் சேவக ஐயா இந்தப் பக்கமா போவச்சிலே அந்த பிசாசு இந்த ஊட்லே நடமாடிச்சாம்! அவரு பயந்து போய் தான், இண்ணக்கி இந்த விபூதியே மந்திரிச்சு எடுத்துக்கிட்டுப் போய்க்