149
சாந்தியின் சிகரம்
கொடுன்னு சொன்னாரு. அதனாலே வந்தேன், இன்னதான் சூரப் புலியாயிருந்தாலும், பிசாசு,பேயி, பூதம்னா பயப்படாமே இருக்க முடியுமா? அசட்டு தைரியமா அந்தக் கொலை நடந்த எடத்துலே படுக்காதே… பத்ரமான ஒரு தனி எடத்துலே படுத்துக்கோ; விபூதியெ மடியிலேயே வெச்சுக்கோ; அப்பத்தான் பயப்பட மாட்டே…
போலீ:- அட… சும்மா இரு!… அந்த ப்ரகஸ்பதி அங்கே வந்து பாத்தானோ? இதெல்லாம் சும்மா மூட்டே அளக்கற பேச்சு! இந்த அம்பலவாணன் இருக்கற எடத்துலே பேய் உலாவுவதாம்! பிசாசு நடக்குதாம்! அப்படி என் கண் முன்னே வந்தா, கொண்ணுப்புட மாட்டேனா? கொண்ணு!… நீ பயப்படாதே. தைரியமாயிரு; போய் வா, போ—என்று நயமாகக் கூறினான்.
மனைவி:- தே! இதோ பாரு! நீ என்னமோ சுலபமா சொல்லிப் புட்ரே, ஊட்லே கெடக்கற நானு என்ன பாடு பட்றேன் தெரியுமா? எந்தத் தடியனையாவது காவல் வெச்சுப்புட்டு, நீ ஊட்டுக்கு வந்துடு. இதென்ன பீடெ புடிச்ச கொலையும், காவலும்! இந்த கொலையிலே சம்மந்தப்பட்ட பாவிங்க, ஒன்னெயும் ஏதாச்சும் செஞ்சு விட்டால்……
போலீ:-அட பயித்தியமே! என்னையாவது, கொலை செய்வதாவது! அந்தப் பாச்சாவெல்லாம் இங்கே பலிக்காது; புள்ளே! போ!… ஊட்டுக்கு போ! வீணா மனசே கொழப்பிக்காதே!—என்று கூறி அனுப்பினான். அசகாய சூர வீரனாகிய அம்பலவாணன், வெகு தைரியமாய்ச் சாப்பிட்டுத் தாம்பூலம் தரித்து, வாசல் கேட்டை பூட்டிக் கொண்டு உள்ளே சென்றான்.
என்னதான் இருந்தாலும், இதுகாறும் இதைப் பற்றி அதிகம் எதுவுமே எண்ணாததால், இதைப் பற்றிக் கவலையே இல்லாதிருந்தது. இப்போது மனைவி சொல்லியதுமின்றி, பீட் கான்ஸ்டேபில் ஏதோ உலாவுவதைப் பார்த்த-