வை. மு. கோ. 103-வது நாவல்
150
தாகக் கூறியதுதான் சடக்கென்று நினைவுக்கு வந்ததும், இத்தனை நாட்கள் இல்லாமல், இன்று கண்கள் பங்களாவின் கதவையும், ஜன்னலால் உட்புறத்தையும் நோக்கின. அதே சமயம், நெஞ்சும் அவனையறியாது ‘திக்’கென்று அலறச் செய்தது. “சே!…ப்ரமை!… உள்ளேயாவது, பிசாசு உலாவுவதாவது?” என்று தன்னைத்தானே தைரியம் செய்து கொண்டு, பங்களாவின் முன் பக்கத்து வீதி வராண்டாவில் விளக்கைப் பெரிதாகப் போட்டு விட்டு உட்கார்ந்தான்.
களங்கமில்லாத வரையில் பயமே இல்லை. ஒரு சிறிய புள்ளி களங்கம் உண்டாகி விட்டால், இனி கேட்க வேண்டுமா? எலி, பெருச்சாளி ஓடினால் கூட பயம் ‘திடும் திடும்’ என்று தூக்கி வாரிப் போட்டுக் கலக்குகிறது. சற்று நேரம் சமாளித்துக் கொண்டான். “ஐயையோ!… அப்பா!… அப்பா! என் மீது கருணையில்லையா?”… என்று தீன ஸ்வரத்தில் மெல்லிய ஓசையுடன் குரல் கேட்பது போல் ஒரு சப்தம் கேட்டதும், உண்மையில் அம்பலவாணனை கால் முதல் தலை வரையில் ஒரு ஆட்டு ஆட்டி, நடுக்கி வெயர்வையைச் சொட்ட விட்டது. மிகுந்த ப்ரயாஸைப்பட்டு சமாளித்துக் கொண்டு, தன் மனைவி கொடுத்த விபூதியை ஒரு பிடி எடுத்துத் தலை முதல் கால் வரையில் தேய்த்துக் கொண்டு, வாயிலும் போட்டுக் கொண்டு “ஹரஹர மகாதேவா! சுடலையிலேயே வாஸம் செய்யும் சாம்பமூர்த்தியே! இந்தக் கொலைக் களத்திலும் நீயே வந்திருந்து, என்னைக் காப்பாற்று; வீண் ப்ரமையான பயத்தை உண்டாக்காதே” என்று பலமாக வேண்டிக் கொண்ட போது, “குலத்ரோகீ! சண்டாளீ! போய் விடு; என்னெதிரில் நில்லாமல் போய் விடு… நாசகாலீ! போய் விடு; மான ஹீனமற்ற பாவியே! போய் விடு”… என்று ஆண் குரல் மிகவும் கரகரப்புடன் அழுத்தமாய் அடித்தொண்டையிலிருந்து மெல்ல வரும் சப்தம் கேட்டதும், அம்பலவாணன் எழுந்தே ஒரு குதிகுதித்தான். “இது என்ன கூத்து!… அந்தப் பாவி ஏன் இப்படிச் சொல்லிச்