உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

சாந்தியின் சிகரம்

சென்று, என் மனத்தைக் கலக்கி விட்டுப் போனாள்? அப்பனும், மகளும் பேசுவது போலவே குரல் கேட்கிறதே! பிசாசு இப்படித்தானே பேசும் என்று பெரியவர்களும் சொல்வார்கள்! ஐயையோ! இப்போது பேச்சுக் கேட்பது போல், இங்கு உருவமும் உலாவ வந்து விடுமா? என்ன செய்வேன்? இதென்ன க்ரகசாரம்?” என்று இவன் பயந்து தவித்துக் கொண்டே, ஜன்னலால் உள்புறம் பார்த்தான்.

ஒரே இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில், எங்கோ சிறிய வெளிச்சம் தெரிகிறது. அதில் கவுனணிந்த வெள்ளைக்கார உடையுடன் ஒரு பெண்ணுருவம் உலாவுவதையும், சாக்ஷாத் துரைக்கண்ணனே மகத்தான கோபத்துடன் உலாவுவது போல் தோன்றியதும், துள்ளிக் குதித்தான்… நேரே வீதி கேட்டுக்கே ஓடி வந்து விட்டான். கதவைத் திறந்து கொண்டு ஓடி விடலாமா என்றும் எண்ணினான்…

“அப்படிச் செய்தால், ‘ஒரு வீரனான போலீஸ்காரனுக்கு தைரியம் இல்லை, கோழை! இவன் இனி எதற்கும் லாயக்கற்றவன்’ என்று அதிகாரிகள் கரும் புள்ளி வைத்து விடுவார்களோ!” என்ற பயமும் தோன்றியது. “பிசாசாவது? பேயாவது?… சீச்சீ! செருப்பாலடிப்பேன்… ஜோட்டாலடிப்பேன்… சிவசிவ சிவசிவ…” என்று தனக்குள் தானே தைரியம் செய்து கொண்டு, ஜபம் செய்ய வாரம்பித்தான்.

சுமார் அரைமணி நேரம் வீதிக் கதவருகிலேயே நின்ற பிறகு, மறுபடியும் உள்பக்கம் வந்தான். ‘திக்குதிக்கு’ என்ற பயம் மட்டும் நீங்கவே இல்லை. மறுபடியும் தைரியமாய் உள்புறம் பார்த்தான். எங்கும் ஒரே இருள்தான் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு விதமான உருவத்தையும் காணவில்லை. சப்தமும் கேட்கவில்லை. “அட க்ரகசாரமே! இந்த செங்காத்தா சும்மா போகாமல், ஏதோ கலக்கி விட்டுப் போனதனால், எனக்கு என்னை யறியாமலேயே பயமும், ஏதோ ஒரு வித வெளித் தோற்றம் போன்ற அதிர்ச்சி-