உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

170

என்ன விஷயம் எப்போது வந்து விடுமோ என்று பயந்து, நான் இரவு பகல் பகவானை வேண்டி, என் தாயாருக்கு அத்தகைய விபத்து ஏதும் வாராது காப்பாற்றும்படி, ப்ரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்; அதனால்தான் அப்படி பயந்து கேட்கிறேன்” என்று பதறியவாறு கேட்டான்.

ஜெயிலர் வெகு சாந்தத்துடன், “ஸார்! அப்படி எல்லாம் ஒன்றும் பயப்பட வேண்டாம்; உங்கள் மனிதர் யாரும் வரவில்லை, நான் உங்களை ரூலுக்கு விரோதமாய் ஒரு முக்ய காரியமாய் அழைத்தேன். கைதியொருவனுக்கு பலமான அடிபட்டு, ஆபத்தான நிலைமையிலிருக்கிறான். ஜெயில் டாக்டர் வெளியில் சென்றிருக்கிறார். அவர் வருவதற்குள் என்ன ஆகி விடுமோ? என்று பயமாயிருப்பதாலும், வேறு டாக்டரைக் கூப்பிட்டுக் காட்டுவதை விட, நீங்கள்தான் அன்றே இம்மாதிரி தொழில் செய்வதாகக் கேட்டுக் கொண்டதாலும், அவசரம், ஆபத்து இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து விட்டதாலும், உங்களைக் கூப்பிட்டேன். ஆஸ்பத்திரிக்கு வாருங்கள். அந்தக் கைதியைக் கவனிக்க வேண்டும்.”

என்று கூறியதைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு ஆனந்தத்தினால், முகம் பூரித்து ஒரு குதி குதிக்கச் செய்தது. தன்னை விடுதலை செய்திருந்தால் கூட, இத்தனை சந்தோஷம் உண்டாகியிருக்காது. தனது இதயத்தில் கொந்தளிக்கும் ஸேவையின் துடிதுடிப்பையும், ஆனந்தத்தையும் அப்படியே எடுத்துக் காட்டுவது போல், “ஸார்! இதோ காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறிக் கிளம்பினான்.

ஆஸ்பத்திரியை அடைந்ததும், அந்த அடிபட்ட கொலைகாரக் கைதி, ப்ரக்ஞையே அற்றுக் கிடப்பதையும், கட்டை வெட்டும் கோடாலியால், காலில் வெட்டுப்பட்டு விட்டதால், ரத்தம் ப்ரவாகம் போல் பெருக்கெடுத்துப் போய் விடவே, அவனுக்கு மயக்கம் போட்டு விட்டதையும் உணர்ந்த ஸ்ரீதரன் உடனே ரணத்திற்கு வேண்டிய மருந்து-