உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

துளு நாட்டு வரலாறு

6 சிறு நூல்: இந்நூலுக்கு இது தவறான பெயர். சரியாகப் பெயர் கூறவேண்டுமானால் சங்க காலத்துத் துளுநாடு அல்லது கி.பி. 2-ஆம் நூற்றாண்டுத் துளுநாடு என்று இதற் குப் பெயர் சூட்டப்பட வேண்டும். ஏறத்தாழ கி.பி. 100 முதல் 150 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த துளுநாட்டின் செய்தி இந்நூலில் கூறப்படு கின்றது. அக்காலத்துக்கு முற்பட்ட துளுநாட்டு வர லாறு கிடைக்கவில்லை. அக்காலத்தில் துளுநாட்டை யரசாண்ட அரசர் கள் கொங்காணங்கிழார் என்றும் நன்னன் என்றும் பெயர் பெற்றிருந்தார்கள். அவர்கள், அக்காலத்தில் தமிழகத் தில் பல இடங்களில் இருந்த வேளிர் என்னும் குறு நில மன்னர்களைச் சேர்ந்தவர்கள். கொங்காணங் கிழா ராகிய நன்னர்கள், தங்களுடைய சிறிய துளு இராச்சி யத்தைப் பெரிதாக விரிவுபடுத்தக் கருதி, சேரநாட்டின் வடக்கிலிருந்த பூழி நாட்டையும், அதற்குக் கிழக்கில் இருந்த வட கொங்கு நாட்டையும் கைப்பற்றிக் கொண் டார்கள். ஆகவே சேர அரசருக்கும் துளு நாட்டரசருக் கும் அரசியல் பகைமை ஏற்பட்டு அவ்விருவருக்கும் போர்கள் நிகழ்ந்தன. கடைசியில் சேர அரசர் துளு அரசர்களை வென்று தங்களுக்குக் கீழே அடக்கி விட் டனர். இச்செய்திகள் இந்நூலில் கூறப்படுகின்றன. அக்காலத்துத் துளுநாட்டு மக்களின் சமூக வரலாறு, நாகரிகம், பண்பாடு முதலியவை யெல்லாம் தமிழகத் துப் பண்பாட்டுடன் ஒத்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், துளுநாட்டுப் பண்பாடு, நாகரிகங்களைப் பற்றிச் சங்க நூல்கள் தனியாக ஒன்றும் கூறவில்லை. ஆகவே அச்செய்திகள் இந்நூலில் இடம் பெறவில்லை. இந்நூலிலே சில செய்திகள் சிற்சில இடங்களில் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. மேற்கோளுக் காகவும் அனுவாதத்தின் பொருட்டும் ஆராய்ச்சிக்குச்