உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

19

துளு நாட்டு வரலாறு 19 ணப்படாத நறவு) என்று தமிழ்ப் புலவர்கள் கூறினார்கள். துளுநாட்டைச் சேர அரசர் வென்ற பிறகு இத்துறைமுகப் பட்டினத்தில் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் (இவன் செங்குட்டுவனுக்கும் நார் முடிச் சேரலுக்கும் தம்பி) தங்கியிருந்தான்.' கிரேக்க ரோம வாணிகர்கள் நறவை 'நவ்றா' என்று கூறினார்கள். துளுமொழியில் இது நாறாவி என்று கூறப்பட்டது. இங்கு யவனக் கப்பல்கள் வந்து வாணிகஞ் செய்ததாகத் தெரிகின்றது. சேர நாட்டுத் தொண்டித் துறைமுகந்தான் நறவு என்று சிலர் கருதுகின்றனர். துளு நாட்டி லுள்ள மங்களூர்தான் நறவு என்று வேறு சிலர் கருதுகிறார்கள். நறவு துளுநாட்டிலிருந்த கடற் கறைப் பட்டினம் ஆகும். ஏழில்மலை இது துளுநாட்டில் இருந்த மலைகளில் ஒன்று. இது துளுநாட்டின் தெற்கே இருந்தது. ஏழில் நெடுவரை என்றும், ஏழிற்குன்று என்றும் இதனைக் கூறுவர். ஏழில்மலையின் ஒரு பிரிவு பாழிமலை (பாழிச்சிலம்பு) என்று பெயர்பெற் றிருந்ததையும் அங்குப் பாழி என்னும் ஊர் இருந்ததையும் முன்னமே கூறினோம். என்றும் 'பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பு' 2 1. பதிற்றுப். 6-ஆம் பத்து. 10:9-12. 2. அகம்.152 : 12-13