உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

25

துளு நாட்டு வரலாறு 25 என்றும் வேறு பெயர்கள் உண்டு. இக்கோயில் இப் போதும் கிராம தேவதைக்கோவிலாக இருந்து வருகிறது. இதற்குச் சிறிது தூரத்தில் 'துர்க்கை' கோயில் ஒன்று இருக்கிறது. அது வேறு கோவில். மங்களூருக்குத் தெற்கே 21 மைல் தூரத்தில் கதிரி என்னும் பேர்பெற்ற இடம் இருக்கிறது. இங்கு மஞ்சுநாதர் கோவில் இருக்கிறது. இது அக் காலத்தில் பேர்போன பௌத்தக்கோவிலாக இருந் தது. பௌத்தக் கோவில்களாகையால் இந்தக் கதிரிக் கோவிலுக்கும் மங்கலாதேவி கோவிலுக்கும் ஆதிகாலத்தில் தொடர்பு இருந்தது. சிலப்பதிகா ரத்தில் கூறப்படுகிற மங்கலாதேவி கோவிலும் பாசண்டச் சாத்தன் கோவிலும் முறையே மங்கலாதேவி கோவிலும் கதிரிக் கோவிலும் ஆகும். கதிரிக் கோவில் இப்போது மஞ்சுநாதர் கோவில் என்று கூறப்படுகிறது. மஞ்சுநாதர் என்பது பௌத்தரின் போதி சத்துவருக்குப் பெயர். இக்கோவிலில் இப்போ துள்ள லோகேசுவரர் உருவம் பௌத்தரின் அவலோகீஸ்வரர் உருவமே. மகாயான பெளத் தத்தில், லோகேசுவரர் என்னும் லோகநாதர் தாரை தேவியின் கணவன் என்று கூறப்படுகிறார். சிலப் பதிகாரத்தில் கதிரிநாதர், பாசண்டச்சாத்தன் என்று கூறப்படுகிறார். கதிரி மஞ்சுநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள மலையில் இயற்கையாக அமைந்த குகைகள் உள்ளன. அவை பௌத்த பிக்குகள் தங்கியிருந்த 1. JR.A.S. 1894 P. 85 1062-2