உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

துளு நாட்டு வரலாறு

24 துளு நாட்டு வரலாறு புயல் அடித்தாலும் இங்குக் கப்பல்களுக்கு ஆபத்து நேரிடுவதில்லை. இத்தீவுகளில் வடக்குப் பாகத்தில் உள்ள 8 தீவுகளுக்கு அமிந்தீவு என்று இப்போது பெயர் கூறப் படுகிறது. இவை துளுநாட்டோடு சேர்ந் தவை. இங்குப் பலாமரமும் கமுகுமரமும் பயிராகின் றன. தென்னையும் உண்டு. வரகு, கேழ்வரகு தானி யங்கள் பயிராகின்றன. நெல் பயிராவதில்லை. சங்கநூல்களில் கூறப்படுகிற கடல் துருத்தி என்பது இத்தீவுகளாக இருக்கக்கூடும். கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்தக் குறும் பர்கள் இத்தீவுகளில் இருந்தவராதல் வேண்டும். இங்கிருந்த குறும்பர் துளு நாட்டு நன்னனுக்குக் கீழடங்கி வாணிகக் கப்பல்களைக் கொள்ளையடித் தனர். சேரன் செங்குட்டுவனால் வெல்லப்பட்டவர் இத்தீவினராதல் வேண்டும். மங்களூர் இதற்கு மங்கலாபுரம் என்னும் பெயரும் உண்டு. இது துளுநாட்டில் நேத்திராவதி என்னும் ஆறு கடலில் கலக்கிற இடத்துக்கு அருகில் இருந்தது. இது இப்போதும் அப்பெயரோடு இருக்கிறது. கி.பி.2ஆம் நூற்றாண்டிலிருந்த தாலமி (Ptolemy) கூறுகிற மகனூர் என்பது இந்த மங்களூரே. இங் குள்ள மங்களாதேவியின் பெயரே இவ்வூ ருக்கு அமைந்து மங்களூர் என்று பெயர்பெற்றது. மங்களாதேவி என்பது பௌத்தமதத் தெய்வம். மங்களா தேவிக்கு ஆதிதேவி என்றும் தாராதேவி