உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

23

துளு நாட்டு வரலாறு வலம்படு கொற்றந் தந்த வாய்வாட் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் '1 கடல் துருத்தி 23 துளுநாட்டைச் சேர்ந்து அரபிக்கடலில் சிறு சிறு தீவுகள் சில இருந்தன. அந்தத் தீவுகள் துளு நாட்டு 'நன்ன' அரசரின் ஆளுகைக்கு உட்பட்டி ருந்தன. அத் தீவுகள் ஒன்றில் நன்னனுக்குக் கீழடங்கிய குறும்பத் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் கடம்ப மரத்தைத் தன்னுடைய காவல் (அடையாள)மரமாக வளர்த்து வந்தான். அவன் நன்னனுடைய தூண்டுதலின்மேல் சேரநாட்டுக்கு வாணிகத்தின் பொருட்டு வந்த யவனக் கப்பல் களைத் தடுத்துக் கொள்ளையடிக்துக் கொண்டிருந் தான். அந்தக் குறும்ப அரசனை, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன்மகனான சேரன் செங்குட்டு வனைக்கொண்டு வென்றான். துளு நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் (இப்போ தைய மலையாளதேசம்) மேற்கே அரபிக்கடலில் நூறு மைலுக்கு அப்பால் லக்ஷத்தீவு என்று பெய ருள்ள தீவுகள் இருக்கின்றன. இத்தீவுகள் பவழப் பூச்சிகளால் உண்டானவை. கடல் மட்டத்துக்கு மேல் 10 அல்லது 15 அடி உயரம் உள்ளவை. வடக் குத் தெற்காக இத்தீவுகள் 1 மைல் முதல் 6 மைல் நீளமும் ஏறத்தாழ ஒரு மைல் அகலமும் உள்ளவை. இத்தீவுகளுக்கு அருகில் கடல் அலை இல்லாமல் கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது 1: அகம்.199: 18-22 2. பதிற்றுப்பத்து 2-ஆம் பத்து, 5-ஆம் பத்து