26
துளு நாட்டு வரலாறு
26 துளு நாட்டு வரலாறு குகையாகும். அக்குகைகள் இப்போது பாண்டவ குகைகள் என்று கூறப்படுகின்றன. மங்களூரில் உள்ள மங்கலாதேவியின் கோவி லைப் பற்றியும் அதன் அருகில் உள்ள கதிரிக் கோவிலைப் பற்றியும் சிலப்பதிகாரத்தில் இவ்வாறு கூறப்படுகிறது: "மங்கல மடந்தை கோட்டம்”1 'ஆயிழைக் கோட்டம்.'9 'மங்கலமடந்தை கோட்டத் தாங்கண் சேங்கோட்டுயர்வரை சேணுயர் சிலம்பில்' * உரை (இதில் மங்கல மடந்தை என்பதற்கு மங்கல தேவி என்று அரும்பத வுரையாசிரியர் எழுதுவது காண்க. இதன் அடிக்குறிப்பில் சிலப் பதிகாரப் பதிப்பாசிரியராகிய டாக்டர் உ. வே. சாமி நாதையர், "மங்கலா தேவி என்றது, கண்ணகியை; மங்கலாபுரம் அல்லது மங்களூர் என்பது இத் தேவி காரணமாக வந்த பெயர்” என்று குறிப்பு எழுதியிருப்பது தவறு என்பது சொல்லாமலே தெரிகிறது. இதுபற்றி இங்கு விளக்கம் தேவை யில்லை.) மங்கலாதேவியின் கோட்டத்துக்கு அருகில் இருந்ததாகச் சிலம்பு கூறுகிற 'செங்கோட்டுயர் வரை சேணுயர்சிலம்பு' கதிரிக்கு அருகில் உள்ள மலையாகும். இங்குப் பௌத்த முனிவர் தங்கி யிருந்த இயற்கைக் குகைகள் இருந்தன என்று முன்னமே கூறினோம். இங்குள்ள சுனைகளில் 1. சிலம்பு. வரந்தருகாதை 88 2. சிலம்பு. வரந். 61. ஆயிழைக் கோட்டம்-மங்கலா தேவி கோயில். அரும்பதவுரை
சிலம்பு. வரந்தரு.153-154