28
துளு நாட்டு வரலாறு
2. நன்னர் வரலாறு அரசியல் சூழ்நிலை நம் ஆராய்ச்சிக்குரிய கி. பி. இரண்டாம் நூற் றாண்டிலே துளுநாட்டின் அரசியல் சூழ்நிலை எப் படி இருந்தது என்பதைக் கூறுவோம். துளுநாட் டின் மேற்கில் அரபிக் கடல் இருந்தது. இக்கடல் வழியாக யவன, அராபிய வாணிகக் கப்பல்கள் துளுநாட்டுத் துறைமுகப் பட்டினங்களாகிய மங்க ளூர், நறவு முதலிய ஊர்களுக்கு வந்துபோயின. துளு நாட்டுக்கு அருகிலே அரபிக் கடலிலே 'கடல் துருத்தி' என்னும் சிறு தீவுகள் இருந்தன. அவை துளுநாட்டுக் குரியவாக இருந்தன. துளுநாட்டின் தெற்கே சேரநாடு இருந்தது. (சேரநாடு, இப்போது மலையாளம் எனப்படும் கேரளநாடாக மாறிப் போயிற்று) சேரர் என் னும் தமிழரசர்கள் சேரநாட்டை யரசாண்டார்கள். சேர மன்னருக்கும் துளுநாட்டு அரசருக்கும் எப் போதும் பகை. அவர்கள் அடிக்கடி ஒருவர்க் கொருவர் போர் செய்துகொண் டிருந்தார்கள். துளுநாட்டின் கிழக்கே வடகொங்குநாடும் கன்னடநாடும் இருந்தன. இப்போதுள்ள மைசூர் இராச்சியத்தில் பாய்கிற காவிரி ஆற்றின் தென் கரை வரையில் வடகொங்குநாடு அக்காலத்தில் பரவியிருந்தது. வடகொங்குநாட்டில் அக்காலத் தில் பேரரசர் இல்லை. புன்னாடு, எருமைநாடு, அதிக