உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

துளு நாட்டு வரலாறு

50 'ஒன்னார், துளு நாட்டு வரலாறு ஓம்பரண்கடந்த வீங்கு பெருந் தானை அடுபோர் மிஞீலி செருவேல் கடைஇ முருகுறழ் முன்பொடு பொருதுகளஞ் சிவப்ப ஆஅய் எயினன் வீழ்ந்தென.* என்பதனாலும், 'கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிஞீலியொடு பொருதுகளம் பட்டென' என்பதனாலும் அறிகிறோம். இரண்டாம் நன்னனுடைய சேனைத் தலைவ னான மிஞிலி என்பவன் இப்போர்களை வென்றான். இந்த மிஞிலி, பாரம் என்னும் ஊரின் தலைவன் என்று முன்னமே கூறினோம். இவன், பாண்டி யன் சேனாபதியாகிய அதிகமான் நெடுமிடல் அஞ் சியையும், சேரன் படைத் தலைவனான வெளியன் வேண்மான் ஆய் எயினனையும் போரில் வென் றதை மேலே கூறினோம். இரண்டாம் போர் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் துளு நாட்டின்மேல் செய்த முதற் போரிலே தோல்வி யடைந்தான். ஆனாலும், அவன் போர் முயற் சியை விட்டுவிடவில்லை. தானும் தன்னுடைய தம்பியாகிய சேரன் செங்குட்டுவனும் இளைய தம்பியாகிய ஆடு கோட்பாட்டுச் சேரலாதனும் முனைந்து நின்று இரண்டாம் முறையாகத் துளுநாட்டின் மேல் போர் செய்தார்கள். இது மும்முனைப் போராக இருந்தது. நார்முடிச் சேரல் துளுநாட்டின் தென் பகுதியில் நன்னனை அகம். 148: 7-8

    • அகம். 181 : 3-7