உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

216

மோதப்பட்டு நடந்தான். பிறகு ஒரு ஆவேசத்துடன், ஜெயிலரை நோக்கி, “ஸார்! என்னை எப்போது மாற்றப் போகிறீர்கள். எனக்கு இங்கு பிடிக்கவே இல்லை. தயவு செய்ய வேணும்,” என்றான்.

ஜெயி-டாக்டர்! என்னால் முடிந்ததை நான் கட்டாயம் செய்கிறேன். டாக்டர்! ஒரு சமாசாரம்! தயவு செய்து, என்னுடைய தனி விடுதிக்கு வர வேணும்; நான் உம்மிடம் சில நிமிஷங்கள் தனிமையில் பேச வேண்டும்… என்று ஒரு பீடிகை போட்டார்.

இதைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு, மிக மிக ஆச்சரியமும், அதிர்ச்சியும் சேர்ந்து உண்டாகியது. உடனே ஜெயிலரை நிமிர்ந்துப் பார்த்து “சார்! உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகிறது. என்னுடைய வழக்கு விஷயத்தில், அப்பீல் சம்மந்தமாகத்தான் பேசப் போகிறீர்கள் என்று தெரிகிறது. அது மட்டும் வேண்டாம். என்னைப் படைத்த ஆண்டவன் இருக்கிறான், இதைப் பற்றித் தீர்ப்பு செய்வதற்கு; தாங்கள் தயவு செய்து, இது விஷயத்தில் தலையிடக் கூடாது…” என்று சொல்வதைத் தடுத்து, ஜெயிலர் ஸ்ரீதரனை ஒரு கைதி என்றும் பாராமல் கையைப் பிடித்துக் கொண்டு, “டாக்டர்! நான் அப்பீல் விஷயமாய்ப் பேசக் கூப்பிடவில்லை. எனக்கு ஜோசியம் சிறிது தெரியும். அது விஷயமாய்ப் பேசவே கூப்பிடுகிறேன். உங்களை நான் வெளியூருக்கு மாற்றி விட்டால், நீங்கள் உங்கள் தகப்பனாரைப் பார்க்க முடியாமல் போய் விடுமே; இப்போது பயந்து, பயந்து ரகஸியமாய்ச் செய்யும் சிகிச்சையும், பாதியில் விட்டுப் போய் விடுமே…” என்று ஜெயிலர் சொல்லும் திடீர் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு, ஆகாசமும் பூமியும் ஒரே சுற்றாகச் சுற்றி, அவனே மூர்ச்சை போட்டு விழுந்து