215
சாந்தியின் சிகரம்
பார்க்கும் சந்தோஷ நிம்மதி உண்டாகாது தவிக்கும்படி நீங்கள் செய்து விட்டீர்களே…”
என்று முடிப்பதற்குள், ஆயாஸம் மேலிட்டு அயர்ந்து போய் விட்டான். இதற்கு மேலும் பேசினால், தனது குடும்ப ரகஸ்யங்கள் எங்கே வெளியாகி விடுமோ என்கிற பயத்தினால், அவனுக்கு ஆகாரத்தைக் கொடுத்து, களைப்பைத் தீர்த்து வைத்துப் பின், “இதோ பாரப்பா! எத்தனையோ பேரிடம், எத்தனையோ விதமாய் உன் சரித்திரத்தைச் சொல்லியதாக நீயே சொல்கிறாய். என்னிடமும் ஒரு தினுஸாய், ரஸமாய் சொல்லி விட்டாய்-ஒரு ஏழை சிறுவனுக்காக, நீ செய்த காரியம் உண்மையாயிருந்தால், உன்னுடைய முந்திய பாவத்திற்கு ஒரு அளவு பரிகாரத்தை நீ செய்த புண்ணியத்தால் பெற்றாய். இந்த உலகத்தை விட்டு, நாம் அங்கு போயும் என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணுகிறாய். இந்த ஜென்மத்தில் செய்துள்ள பாபங்களை அங்கு நரகத்தில் அனுபவித்தும், அதிலும் தீராமல், மறுபடியும் ஒரு பாவ ஜென்மம் பூச்சியோ, புழுகோ, நாயோ, பேயோ… எடுத்து, இதை பூராவும் தீர்த்த பிறகுதான் முடிவு ஏற்படும் தெரியுமா? ஆகையால், நீ அதை உணராமல், மேலும், மேலும் பாதகத்தைச் செய்து, பாவத்தைக் கட்டிக் கொள்ளாமல், பகவானை பஜனை செய்…” என்று ஒரு மாதிரியான உணர்ச்சியுடன் கூறி விட்டுச் சடக்கென்று போய் விட்டான்.
“நானும் நிரபராதியாயிருந்து, சிறையில் தவிக்கிறேன், என் பிதாவும் நிரபராதியாயிருந்து, இத்தனை துன்பங்களைப் படுவதா…என்ன உலகம். என்ன விதியின் வலிமை… ஆகா! கடவுளே! உன் மாயா விசித்திரமே விசித்ரம்,” என்று பல விதமான எண்ணத்தினால்