உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ.103-வது நாவல்

214

வென்று கத்தினான். நான் இவைகளை தற்செயலாகப் பார்த்து விட்டேன்.

அந்தச் சிறுவனிடம் உள்ள நோட்டுகளுடன் அவனை ஓட விட்டு விட்டு, நானே அங்கு சில நோட்டுகளைப் பொறுக்கிக் கொண்டு, அகப்பட்டுக் கொண்டேன். என் நல்ல காலத்திற்கு, ரோந்துக்காரர்கள் வந்தார்கள். உடனே சந்தோஷமாகப் பிடிபட்டு விட்டேன். நான் தாடியும், மீசையும் வளர்த்துக் கொண்டு, பெயரையும், ஊரையும் மாற்றிக் கொண்டே திரிந்ததால், வெகு சுலபமாய்ப் பிடிபட்டு விட்டேன்.

இனி கேட்க வேண்டுமா? நான் திருடிக் கொண்டு வந்ததை, ரிக்ஷாக்காரன் பார்த்துப் பிடிக்க வருகையில், ரிக்ஷாக்காரனை அடித்துக் கொன்று விட்டதாக வழக்கு வெகு ஸ்வாரஸ்யமாய் ஜோடனையாகி விட்டது. ரிக்ஷாகாரன் ஏற்கெனவே சீக்காளி எனக்கு தெரியும். அவன் மீது குதித்த வேகத்தில், அவன் சில நிமிஷங்களுக்குள்ளேயே இறந்து விட்டான். அதுவே எனக்கு அனுகூலமாயிற்று. ஜம்மென்று மரண தண்டனையில், சிறை புகுந்தேன். பிறகு, ஆயுள் தண்டனையாக மாறியது. அந்தமான் முதல் பல ஊர் சிறைகளைப் பார்த்தேன். சிறையை விட்டுப் போகாமலேயே, ஸ்திரமாயிருப்பதற்கு நான் துன்மார்க்கனாகவே நடந்து கொண்டு, என்னுடைய தண்டனையை ரெட்டிப்பாக்கிக் கொண்டு, வெளியாருக்கு துஷ்டனாயும், என் அந்தரங்க வாழ்க்கையில் நாம பஜனையும் செய்து கொண்டு, காலத்தைக் கடத்துகிறேன். சிறையில் உழைக்க தேகத்தில் சக்தி இல்லை. உழைக்காதிருப்பதற்கு வழியில்லை. அதனால், விறகு பிளக்கையில், நானே உயிரையும் பிளந்து கொள்வதற்காக, இந்த காரியத்தை செய்து விட்டேன். இதிலும் நான் எதிர்