உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

246

ததால், ஜெயிலரே வந்ததைப் பார்த்து, வார்டர்கள் வியந்தார்கள். ஸ்ரீதரன் அந்தக் கடிதத்தைப் பார்த்தான். தான் நிரபராதி என்பது ருஜுவாகி விட்டதால், விடுதலை செய்து விடும்படி ஆர்டர் வந்திருப்பதைப் படித்து, முதலில் பகவானை, திக்கு நோக்கிக் கை குவித்தான். சிறையிலுள்ளவர்களுக்கு சில புத்திமதிகள் கூறிப் பின், ஜெயிலருடன் நடந்தான்.

கண்ணீர் மட்டும் ஆறாய்ப் பெருகுகிறது. ஆபீஸையடைந்ததும், ஜெயில் உடையை மாற்றித் தனது சொந்த உடையை அணிந்த ஸ்ரீதரனை, ஜெயிலர் அப்படியே சேர்த்துக் கட்டிக் கொண்டார். “டாக்டர்! நான் ஒரு நிரந்தரமான கைதி. ஆனால், மனிதர்களின் கண்ணுக்கு, பெரிய மனிதனாய் விளங்குகிறேன், குற்றமற்ற குணக்குன்றாயும் காண்கிறேன்! ஆனால், என்னிதயத்தில் கரையானறிப்பது போன்ற ஒரு ஆறாத புண்ணின் பாதை, என்னை வதைக்கிற ரகஸியத்தை, ஆண்டவன் தானறிவான். அந்த பாதகத்தை எத்தனை ஜென்மங்களில்தான் கழிப்பேனோ தெரியாது. டாக்டர்! நான் தங்கள் பிதாவின் விஷயமாக மிகவும் அழுத்தமாய் எழுதி விட்டேன். அவருடைய ரகஸியம் தெரியாததால், ஏகப்பட்டக் கரும் புள்ளிகள் முன்பெல்லாம் விழுந்து விட்டது. அதை இனி மறைக்க முடியாததால், இப்போது எப்படி எழுதியிருக்கிறேன் என்றால், அவருடைய உடல் நிலை மோசமாகி விட்டதால், உயிருக்கே ஹானி நேரக் கூடும் என்று தோன்றுகிறது; காலில் ரணம் ஆறாததால், காலையே எடுக்கும்படியாகி விடுமோ என்றும், டாக்டர்கள் கூறுவதாலும், இப்போதெல்லாம் மிகவும் யோக்யமாய்த் திருந்தி விட்டதாலும், புது வருஷத்தின் ஞாபகார்த்தமாக, விடுதலை செய்யலாம் என்று எழுதியிருக்கிறேன். சர்க்கார் என்னிடமுள்ள மதிப்பினால்,