உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

250

செய்து விட்டேனப்பா! எப்போது துரைக்கண்ணன் வழக்கு நமக்கு அனுகூலமாகி விட்டதோ, இனி அவருடைய சொத்துக்களும், பங்களாவும், தோட்டமும், தர்மத்திற்கு அவர் எழுதியுள்ள வில்லின்படி, சொந்தமாகி விட்டதல்லவா! அதைக் கொண்டே, சரீர நோயிக்கும், ஆத்ம நோயிக்கும் நிரந்தரமான ஆரோக்யமும், சாந்தியும் கிடைக்கும்படிச் செய்து விடுகிறேன். இது சரிதானேப்பா! நீங்கள் வெளியே வரும் நாளை, இவர் எனக்குத் தெரிவிப்பார்; நான் அதற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்து, உங்களைச் சாமியாராகவே செய்து விடுகிறேன். இது த்ருப்திதானேப்பா!”

என்ற வார்த்தைகளைக் கேட்டதும், பிதாவின் உள்ளம் காட்டாற்று வெள்ளம் போல் பூரித்து வியப்புக் கடலாடியது. மகனை மீண்டும் தழுவிக் கொண்டார். கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. ஜெயிலருக்கும் கண்ணீர் வெள்ளமிட்டது என்றால், மிகையாகாது. ‘அப்பா! ஒரு வரன் முடிந்தது. அடுத்தது என்னப்பா!’ என்று ஸ்ரீதரனே கேட்டான்.

“குழந்தாய்! நமக்கு இத்தனை சந்தோஷத்தையும் கொடுத்து, நன்மைகளைச் செய்த இந்த ஜெயிலரின் இதயத்தில், ஆறாத ஒரு புண்ணிருக்கிறது. நீ டாக்டராகையால், அதைக் கிள்ளிக் களைந்தெறிந்து, அவருக்கு சாந்தியைக் கொடுக்க வேண்டும்: அதைச் செய்வதாய் சத்தியம் செய்து கொடு…” என்றார். ஸ்ரீதரனின் அப்போதிருந்த உணர்ச்சிப் பெருக்கின் வேகத்தில், “அப்படியே செய்கிறேன். இது சத்யம்…” என்று கூறி விட்டான். மகனை மார்புறத் தழுவிக் கொண்ட பிதா… “கண்மணீ, எமனிடம் ஸாவித்ரி வரம் வாங்கியது போல், உன்னிடம் நான் வாங்கி விட்டேன். இனி மாறக் கூடாது, இந்த