சாகுந்தல நாடகம்
203
வி தூஷன்' - 169 -ஆம் பக்கத்தில் எழுதியிருக்கும் உரைக்குறிப்பைக் காண்க. இசைக்கழகம் - சங்கீதம் நடக்கும் மன்றம். பண் - இசைப்பாட்டு.
(பாட்டு) விழுநறவு
-
உரையாய்?
இதன் பொருள் : விழுநறவு வேண்டி - சிறந்த தேனைப் பெற விரும்பி, விரி மா இணரில் பருகி - விரிந்த மாமரத்தின் பூங்கொத்திலிருந்து அதனைக் குடித்து, செழுமுளரி யிடை வறிது சேரும் இளவண்டே செழுமையான தாமரை யினிடத்து வீணே சென்று அடையும் இளைய வண்டே, செழுமுளரி யிடையிருந்து செழுவிய தாமரையின்பாற் சேர்ந்திருந்து கொண்டு, திகழ்மாவை நீ ஓர்பொழுதும் மறந்து உறைகுவது- விளங்கா நின்ற மாமலரினை நீ ஒரு நொடிப் பொழு தேனும் மறந்துவிட்டு இருத்தல், பொருந்துமோ உரையாய் - நினக்கு இசைவதாகுமோ சொல்லாய் என்றவாறு.
முளரி - முட்களே சாளரத்திலே உடையது, அஃதாவது தாமரை, முள் அரி எனப் பிரிக்க, அரி - உட்டுளைப்பொருள்.
ச்
வண்டின்மேல் வைத்துப் பாடிய இச் செய்யுட் பொருள், சகுந்தலையின்பாற் காதலின்பத்தை நுகர்ந்து, பின்னர் அவளை அறவே மறந்து தன் அரண்மனையில் வறிதே யிருக்குந் துஷியந்த மன்னனைக் குறிப்பால் உணர்த்திற்று: மாமலர் சகுந்தலைக்கும், வண்டு அரசனுக்கும், முளரி அவன் வறிதிருக்கும் அரண்மனைக்குங் குறிப்புவமைகளாய் நின்றன.
புன்முறுவல் - சிறுநகை. 'வசுமதி’ துஷியந்தனுக்கு முதன் மனைவி; இவளுக்கு இந் நாடக நிகழ்ச்சியில் ஏதொரு தொடர்பும் இல்லாமையின், இவள் இங்கே தற்செயலாய்க் குறிப்பிடப்பட்டான் என்க. ‘அமிசபதிகை' என்பான் பாடியும் ன் ஆடியும் அரசனை உவப்பிக்குங் ‘காதற் பரத்தைய’ருள் ஒருத்தி; இங்ஙனம் ஒருவற்கு உரிமையாகக் காதற்பரத்தையர் சிலர் பலர் அவன்றன் இளமைக் காலந்தொட்டே இருமுது குரவரால் வளர்க்கப்பட்டு வைக்கும் வழக்கம் பண்டைக் காலத் திருந்தமை “காதற்பரத்தை எல்லார்க்கும் உரித்தே” என்னும்