குடி மரபு
15
என்ற ஒரு மராட்டியத் தலைவனும், கடப்பை, கர்நூல், சாவனூர் ஆகிய பகுதிகளில் தனித்தனி நவாப்களும் ஆட்சி செய்தனர்.
உள்நாட்டு வேற்றுமைப் பூசல் களமாகவும், வெளிநாட்டார் வேட்டைக் களமாகவும் விளங்கிய அந்நாளைய தென்னாட்டு அரசியல் வாழ்வில் ஹைதர் புகுந்து, அதை எவ்வாறு தன் வீர வெற்றிக் களமாக மாற்றினான் என்பதை இனிக் காண்போம்.
3. குடி மரபு
மன்னர் மரபிலே தோன்றி, மன்னர் ஆனவரும் உண்டு; குடிமரபில் தோன்றி, மன்னரானவரும் உண்டு. புகழிலும், ஆற்றலிலும், பண்பிலும் பிந்திய வகையினரே மேம்பட்டவர்கள் என்று வரலாறு காட்டுகிறது. உண்மையில், புகழ் மிக்க மன்னர் மரபுகளை ஆக்கியவர்களே குடிமரபினர்தான். ஆயினும், மன்னர் மரபுக்கே புகழ் தந்தவர்கள் கூடத் தம் குடி மரபை மறைக்கவே விரும்பியுள்ளனர். முடி மரபின் மாயப் புதிர் இது. மன்னரின் இம்மயக்க ஆர்வத்தைப் பயன்படுத்தி, மன்னவைத் தன்னலப் பசப்பர்களும், புரோகிதர் குழாங்களும், போலி அரச மரபுகளையோ, தெய்வீக மரபுகளையோ படைத்துருவாக்க முனைந்துள்ளனர். இவற்றின் மூலம், அவர்கள் மன்னரைத் தம் வயப்படுத்தவும், குடி மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து வைத்துத் தன்னலம் பெருக்கவும் தயங்கியதில்லை.
குடி மரபிலே பிறந்து கோ மரபுக்கு மதிப்பளித்தவன் ஹைதர். ஆனால், மேற்கூறிய ஆர்வத்துக்கு, அவன் கூட விலக்கானவன் என்று கூற முடியாது. தன் வீரப் புகழ்