பாகுபாடு
9
அல்லது இறுதியில் ஒரே வகைச் சொற்களை அமைத்து, அச் சொற்களால் அவற்றிற்குப் பெயர் வழங்கும் முறை ஏற்பட்டது. ஐங்குறு தூறு என்னும் பழைய தொகை நூலிலேயே இதன் தொடக்கத்தைக் காணலாம். வேட்கைப் பத்து, வேழப் பத்து, கள்வன் பத்து, குரக்குப் பத்து, கிள்ளைப் பத்து,மஞ்ஞைப் பத்து முதலிய பெயர்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு பாட்டிலும் வேட்கை வேழம் முதலியவை அமைந்துள்ளன. மாணிக்கவாசகர் பாடிய அச்சப் பத்து, அச்சோப் பதிகம், அடைக்கலப் பத்து, அதிசயப் பத்து, அற்புதப் பத்து, அன்னைப் பத்து, ஆசைப் பத்து, கண்ட பத்து, கழுக்குன்றப் பதிகம், குயிற் பத்து,குலாப் பத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து, சென்னிப் பத்து, பிடித்த பத்து, பிரார்த்தனைப் பத்து, புணர்ச்சிப் பத்து, வாழாப் பத்து முதலியன இவ்வாறு அமைந்தபத்துப் பத்துப் பாட்டுக்களே ஆகும்.பிற்காலத்தில் இத்தகைய பதிகங்கள் பல தோன்றலாயின. திருச் சாழல், பதிகம் என்றோ பத்து என்றோ பெயர் பெறாவிடினும், சாழலோ என்னும் சொல் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் அமைந்தமையால் பெயர் பெற்றது காணலாம். திருக்கோத் தும்பி, திருத்தெள்ளேணம்,திருப்பூவல்லி, திருவுந்தியார் முதலியன அவ்வாறே பெயர் பெற்று இருபது இருபது பாட்டுக்களாக அமைந்தவை. 'விடுதி கண்டாய்'என்னும் தொடர் ஒவ்வொரு பாட்டின் இடையிலும் அமைய மாணிக்க வாசகர் பாடிய ஐம்பது பாட்டுக்கள் நீத்தல் விண்ணப்பம்' என்னும் பெயரால் வழங்குகின்றன. நூறு பாட்டுக்கள் அமைந்த நூல்கள் சதகம் என்னும் பெயரால் பிற் காலத்தே வழங்கலாயின. அறப்பளீசுரர் சதகம்,தண்டலையார் சதகம் முதலாயின அவ்வகையின.