குடிலன் வீழ்ச்சி
45
அவன் மன்னன் மனத்தில் சாதி மத வேறுபாட்டுக் கருத்துக்களைப் புகுத்தினான்.
மன்னன் மனம் கரைந்தது. ஆனால், ஹைதரைப் பகைத்துக் கொள்ள அஞ்சினான். எனினும், குள்ளநரிக் குடிலனான குந்தி ராவ், மன்னனுக்குத் தேறுதல் தந்தான். “எதிர்க்கும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள், அரசே! நீங்கள் செய்ய வேண்டுவது வேறு எதுவுமல்ல; நான் சொன்னபடி நடந்து கொண்டால் போதும். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் அவன்.
மன்னன் மனத்தைக் கரைத்த பின், குந்தி ராவ் நாட்டின் எதிரியாகிய மராட்டியப் பேரரசன் பேஷ்வாவைத் தன் கருவியாக்கத் துணிந்தான். தான் பேஷ்வாவின் வகுப்பினன் என்பதை அவனுக்கு நினைவூட்டினான். ஹைதரின் மரபையும், குடியையும் இழித்துக் கூறினான். இவை போதாவென்று பேஷ்வாவின் பண ஆசை, ஆட்சி ஆசையையும் அவன் தூண்டினான். மைசூரின் மீது படையெடுத்து, ஹைதர் அழிவுக்கு உதவினால், படையெடுப்புச் செலவுக்காக ஐந்து இலட்சம் வெள்ளி தருவதாகவும், அத்துடன் ஆண்டு தோறும் திறையாக இரண்டு இலட்சம் அனுப்பி வர இணங்குவதாகவும் அவன் தெரிவித்து மறைவாகக் கடிதம் வரைந்தான்.
சூதறியாத ஹைதர், இச் சூழ்ச்சி வலையில் மெல்ல, மெல்லச் சிக்கினான். சந்தர்ப்பங்கள் இங்கே அவன் எதிரிக்குப் படிப்படியாகச் சாதகமாகி வந்தன.
தன் ஆற்றல் எதுவுமில்லாமல், ஆர்க்காட்டுக்கு நவாபாக, இச்சமயம் வாலாஜா-சுராஜ் உத்தௌலா முகமதலி விளங்கினான். சூழ்ச்சியால் பெற்ற அரசை, அவன் சூழ்ச்சியாலேயே பேண எண்ணினான். ஆகவே, பிரஞ்சுக்காரரைப் பற்றி, ஓயாத கோள் மூட்டி, ஆங்கிலேயரை