உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 கட்டுப்பாடாகவும் நடந்துகொள்வதாலும், சுத்தமாக இருப்ப தாலும், சட்ட வரம்புக் குட்படுவதாலும் இதைப்போன்ற முறைகள் சிறப்பாக நிலவுகின்றன. அமைதி தியேட்டர்களில், படம் காட்டப்படும் மண்டபத்துக்கு உள்ளேயும், வெளியேயும், குண்டூசி விழுந்தாலும் கேட்கக் கூடிய அளவு அமைதி நிலவுவதும் எனக்குப் புதுமையா யிருந்தது. யாவரும் ஒவ்வொரு சொல்லையும் ஆவலோடு கேட்பார்கள்; ஒவ்வொரு காட்சியையும் கூர்ந்து கவனிப் பார்கள். நடிகர்கள் முத்தமிட்டுக் கொள்ளும்போது கணவன் மனைவிமார்களும், காதலர்களும் அதைப் போன்றே செய்வர். படம் பார்த்து முடிந்து வெளியே வரும்போது, அவர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். படம் நடைபெறும் நேரம் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு படம் நடப்பதே மிக அரிது. படத்தின் நீளத்தைப் பொறுத்து அமெரிக்கர் அதன் தகுதியை முடிவு செய்வதில்லை. நம்நாட்டில், ஒரு படம்பார்க்கச் செல்லும்போது, அது திட்டமாக, எவ்வளவு நேரம் நடை பெறும், எத்தனை மணிக்கு முடியும் என்பது தெரிவதில்லை. அமெரிக்கத் தியேட்டர்களில் இச்செய்தியை டிக்கட் விற்கு மிடத்திற்கு அருகில் வெளிப்படுத்தியிருப்பார்கள். ஒரு படம் ஒன்றரை மணி நேரம் ஓடுவதாக வைத்துக் கொள் வோம். ஒன்றுக்கொன்று ஒன்றரை மணி நேரம் வேறு பாடுள்ள இரு கடிகாரங்கள் டிக்கட் விற்குமிடத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும். பிற்பகல் 2 மணிக்குப் படம் பார்க்கச் சென்றால், அவ்வமயம் அந்தக் கடிகாரங்களில் ஒன்று 2 மணியையும், மற்றொன்று 3-30 மணியையும் காட் டும். 'இப்போது நேரம், நீங்கள் காட்சி முடிந்து வெளி யேறும்போது நேரம்' என்ற அறுவிப்புகள் அந்தக் கடிகாரங் களுக்கருகே முறையே காணப்படும்.