உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 உரிமையைப்பேணும் அமெரிக்காவில், பத்திரிகைகளுக்கு எவ்வித தணிக்கையும் இல்லாதது போலவே திரைப்படங்க களுக்கும் தணிக்கை இல்லை. 'செயின்' தியேட்டர்கள் மானவை. அமெரிக்க வாணிக முறையிலே, செயின்கள் முக்கிய இந்தச் சங்கிலித் தொடர்கள் திரைப்பட உற்பத் தியிலும், தியேட்டர்கள் நடத்துவதிலும் இருக்கின்றன. ஒரே குழுவின் கீழ், 400 -க்கு மேற்பட்ட தியேட்டர்கள் இருக் கின்றன.இது போன்ற சங்கிலிகள் மிகப்பல. நியூயார்க்கில் மட்டும் தனித்தனியே நூறு தியேட்டர்களைச் சொந்தமாக வைத்துள்ள சங்கிலிகள் உள. அவற்றில் 12 டிக்கட்டுகளுக்கு ஒரே நேரத்தில் பணம் கொடுத்தால், ஒரு டிக்கட்டுக்குப் பணம் இன்றி, அதாவது 13 டிக்கட்டுகள் தருவர். இந்தப் பதின்மூன்று டிக்கட்டுகளையும் மூன்று மாதங்களுக்குள் பயன் படுத்தி விடவேண்டும். அந்த நகரத்திலுள்ள (அந்தச் சங்கிலி யைச் சேர்ந்த) எந்த தியேட்டரிலும் இந்த டிக்கட்டுகள் செல்லும். படங்களைக் கடனுக்குப் பார்த்துவிட்டு அவற்றுக்கு மாத இறுதியில் சம்பளம் வாங்கியதும் மொத்தமாகப் பணம் கொடுக்கும் முறையையும் இப்போது அமெரிக்கச் செயின் கள் வகுத்திருக்கின்றன! தியேட்டர்கள் 'ஏர் நம் நாட்டில் இப்போது, பல கண்டிஷன்' செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் பல மாதங் கள் மிக்க குளிர் நிலவும் அமெரிக்காவில், குளிர் காற்று வரும் அமைப்பு மட்டும் போதாது. ஆகவே, குளிர்காலத் தில் தியேட்டருக்குள் வெப்பக் காற்று வீசவும் மின்சார உதவி கொண்டு சில அமைப்புகள் எல்லாத் தியேட்டர்களி லும் செய்யப்பட்டிருக்கின்றன. தியேட்டர் அமைப்பு வாழ்க்கையை இன்பமயமாக்கப் பிற கருவிகள் இருப் பதுபோல், தியேட்டரும் நகரங்களில் மட்டுமின்றிப் பெரிய