139 கிராமங்களிளெல்லாம் இருக்கிறது. பல தொழிற்சாலைகளில் சொந்தத் தியேட்டர்கள் உள. எல்லாப் பல்கலைக் கழகங் களிலும் கல்லூரிகளிலும் தியேட்டர்கள் இருக்கின்றன. நோயாளிகள்,படுத்த படுக்கையிலிருந்தவாறே திரைப்படங் கள் பார்க்கத் தக்கபடியும் இப்போது இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய கப்பல்களிலும் தியேட்டர் கள் அமைக்கப்பட்டுள. நியூயார்க்கிலுள்ள கென்னடி ஆகாயவிமான நிலையத்திலும் ஒரு செய்திப்படத் தியேட்டர் இருக்கிறது. பெரிய இரயில் நிலையங்களிலும் தியேட்டர்கள் இருக்கின்றன. . லண்டன் வாட்டர்லூ நிலையத்துக்கு, இரயில் புறப்பட அரைமணி நேரம் முன்பே நான் வந்துவிட்டதால், அங்கிருந்த தியேட்டரில் படம் பார்த்தேன். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலும் ஒரு தியேட்டர் அமைத்தால், மணிக்கணக்கில் தாமதித்து வரும் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரசில் வரவிருக்கும் நண்பர்களை வரவேற்கச் செல்லுவோருக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தேன்! நிலத்திலும் நீரிலும் பயன்படும் தியேட்டர்களும் இப் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆற்றோரங்களிலும் சிறு தீவுகளிலுமுள்ள குறைந்த எண்ணிக்கையுள்ள மக்கள் படம் பார்ப்பதற்கு உதவியாக, மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் செல்லும் தண்ணீர் ஜீப்களில் தியேட்டர் அமைக்கப் பெட்டுள்ளது. இதன் பயனாக, மிதக்கும் சம்பானி (படகு) லேயே படம் பார்க்க முடியும். பலநகரங்களில், பூமிக்குக் கீழேதான் தியேட்டர்களை அமைத்திருக்கிறார்கள். ஒருவேளை இட நெருக்கடி இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்; அல்லது அமைதியாகப் படம் பார்க்க இந்த அமைப்பைச் செய்திருக்கலாம். படம் பார்ப்போருக்கு வசதிகள் தியேட்டரில் படம் பார்க்கும் மண்டபத்திலேயே பல பண்டங்களை விற்பது நம் தனி உரிமை. ஆனால் அமெரிக்கா விலோ தியேட்டர்களிலேயே, நண்பர்களைச் சந்திக்கவும்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/140
தோற்றம்