உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 உணவு உட்கொள்ளவும், புகை பிடிக்கவும், ஓய்வு எடுத்துக் கொள்ளவும் தனித்தனி அறைகள் உண்டு. தியேட்டர்கள் மிகச்சுத்தமாக உள்ளன. 'ஆடிட்டோரியம்' என்னும் படம் காட்டப்படும் மண்டபத்தில் புகை பிடித்தல் அமெரிக்காவிலும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பல அமெரிக்கத் தியேட்டர்களிலே டிக்கட் விற்கும் இடத்துக்கு அருகில், ஒருபணிப்பெண் தொலைபேசிக்கருவியை இயக்கிக் கொண்டிருப்பாள். அவசரமாக ஏதாவது செய் தியை எதிர்பார்க்கும் வணிகரும் பிறரும், தம் பெயரையும் தாம் எந்த வரிசையில், எந்த இடத்தில் இருந்து படம். பார்க்கிறாரென்ற விவரத்தையும் அந்தப் பெண்ணிடம் குறித்துக் கொடுத்துவிட்டுப் படம் பார்க்கச் செல்லுவர். எதிர்பார்த்தப்படி யாராவது அவர்களை தொலைபேசியில் அழைத்தால், அந்தச் செய்தியைக் கேட்டு அதை ஒரு. காகிதத்திற் குறித்து உரியவரிடம் கொண்டுபோய்க் கொடுப் பாள், அப்பணிப்பெண். தாம் கையில் வைத்திருக்கக்கூடிய பல பொருள்களைத் தியேட்டருக்குள் கொண்டுபோவது, நாகரிக மற்றது என்று அமெரிக்கர் கருதுகின்றனர்; யாவரும் அதற்கென ஒவ்வொரு தியேட்டரிலுமுள்ள 'க்ளோக்ரூம்' என்ற 'க்ளோக்கும்' என்ற அலுவல் கத்தில், தம்பொருள்களை (குடை, மழைக் கோட்டுப் போன்ற வற்றைக் கூட)க் கொடுத்து ஒரு சிறிய கட்டணம் செலுத்திச் சீட்டுப் பெற்றுக்கொண்டு, காட்சி முடிந்ததும் அவற்றை மீண்டும் (நம்நாட்டில் சைக்கிள் சொந்தக்காரர்கள் செய்வது போல்) பெற்றுக் கொள்ளுவர். தியேட்டர்களுக்கு வார விடுமுறை நாள் என்பது அமெரிக்காவில் கிடையாது. நியூயார்க்கிலுள்ள ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் என்பதுதான் உலகில் மிகப் பெரிய தியேட்டர். 16 லிப்ட்களும், வெளியே செல்ல 64 வழிகளும் உள்ள இந்த ஆறுமாடி அரண்மனையில், 6200 பேர் ஒருங்கே அமரலாம். வானளாவும் மாடமாளிகைகளுக் கிடைமே