உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 அமைந்து, கம்பீரமான தோற்றம் தரும் இந்தத் தியேட்டர் மிக அழகாக அமைந்துள்ளது. சிறந்த வேலைப்பாடுகள் பல இக்கட்டிடத்தில் காணப்படுகின்றன. இயல், இசை நாடகக் கலைகளை வருணிக்கும் சிறந்த சித்திரங்களும் உண்டு. இவை உலோகங்களிலும், எனாமலிலும் செய்யப்பட்டுள்ளன. 36 சிறுமியர் சேர்ந்து ஆடும் ஒரு நடனத்துடன், இந்தத் தியேட்டரின் ஒவ்வொரு காட்சியும் தொடங்குகிறது. 'பாலே' (Ballet) எனப்படும் இந்தக் குழுநடனம் என்னைக் மிகவும் பரவசப்படுத்திற்று. ஏணைய நாடுகளைக் காட்டிலும், இங்கிலாந்தில் இந்த ஒப்பற்ற நுண்கலை உயர்நிலை அடைந் திருக்கிறது. ஜெர்மனியில் இக்கலையைப் பற்றிய சிறந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர்; கல்லூரிகளும் உண்டு. சிலப்பதிகாரத்திலும், ஏனைய தமிழ் இலக்கியங்களிலும் நாம் காணும் (பெண்கள் எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கூடி வட்டமாய் நின்று கை கோத்து ஆடும்) ஆய்ச்சியர் குரவை என்ற ஒருவகைக் கூத்தைத் திருத்தி அமைத்தே 'பாலே' ஏற்படுத்தப்பட்டிருப்பதாக நமக்குத் தோன்றும். நாடகக் கலையும் அமெரிக்காவில் சிறந்து விளங்குவதை ஈண்டுக் குறிப்பிடலாம். புகழ் பெற்ற புத்தகங்களை அடிப் படையாக வைத்து அமெரிக்கர் நாடகம் நடத்துகின்றனர். 'அமெரிக்காவுக்குள்' என்ற ஜான் கந்தரின் நூலைப் பின் பற்றிய நாடகத்தைக் கண்ணுறும் பேறு, நியூயார்க்கில் எனக்குக் கிடைத்தது. படம் தயாரித்தல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பகுதியாகிய ஹாலிவுட் டில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன; இது சூரிய வெளிச்சம் மிகுதியாயுள்ள இடம். சொந்தமாகக் கார் இல்லாவிட்டால் ஹாலிவுட்டில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத் துக்குச் செல்வது எளிதன்று. சன்செட் பொலிவர்ட்" Sunset Bouleward) என்ற சாலையில் பகலில் மட்டுமன்றி 6