உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சொக்கி



"ழக்கடைதானே இது; பவுன் நகைவிற்கிற கடையா? கூடை இவ்வளவு என்று வாங்கி, டஜன் இவ்வளவு என்று விற்று. அதிலே ஏதேனும் ஆதாயம் கிடைத்தால், அதைக் கொண்டு குடும்பம் நடத்த வேண்டும். பத்துப் பழம் அழுகிப்போனால் ஒருநாள் வருமானம் போய்விடும்! பதம் கெடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வியாபாரம் முன்பு போலவா இப்போது? இரண்டணாதான் கொடுப்பேன்; அசல் நாக்பூர் கமலா கொடுக்க வேண்டும் என்கிறார்கள்! காஷ்மீர் மாதுளம் பழம்; விலை ஒண்ணரை ரூபாய் என்று சொன்னால் நம்புகிறார்களா! உடைத்துக் காட்டு என்கிறார்கள்!வாயிலே கொஞ்சம் போட்டுக் குதப்பிக் கொண்டே இதுவா காஷ்மீர்? யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? நான் என்ன இப்போதுதான் புதிதாகக் காஷ்மீர் மாதுளம் பழம் வாங்க வந்தவனா! என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒவ்வொரு நாள் அடக்கிக்கொள்ள முடியாத கோபங்கூடத்தான் வருகிறது.போய்யா! போய் நேரே காஷ்மீர் கடை வீதிக்கே போய் கூடை கூடையாக மாதுளம் பழம் வாங்கிக் கொண்டு வா!என்று கூறிவிடலாம் என்றுகூடத் தோன்றுகிறது. சொல்ல முடியுமா!வியாபாரம் கெட்டுப் போகுமே! அதனால் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது!

பழக்கடை பரமசிவம் இதுபோலெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கப்பட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் அந்தக் கடையிலே கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் நாலாயிரம் ரூபாயில் ஒரு மச்சுவீடும் ஆறாயிரத்தில் நிலமும் வாங்கினார். ஒரே மகன்! அவன் வேறு ஏதேதோ வேலைக்குப்-