உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

89 68 இலக்கிய மரபு நம்பாதவர் நரகத்திற்குச் செல்வர் என்றும் குறிப்பிடுதல் எங்கும் வழக்கம் ஆயிற்று. உண்மையாகவே, பெரிய காவியம் எழுதி முடித்த பின் அதன் ஆசிரியர் அது தம்மால் ஆகத் தக்க தா என்று வியந்திருப்பார் ; ஏதோ ஒரு பெரிய சக்தியே தம்மைத் தூண்டி எழுதச் செய்தது என்றும், இல்லையேல் தம் சிற்றறிவால் அது முடிந்திருக்காது என்றும் அவர் உணர்ந்த உணர்வே அத் தகைய குறிப்புக்குக் காரணம் எனலாம். வியாசர் கூற விநாயகரே எழுதித் தந்தார் என்றும், காளிதாசர்க்குக் கலைமகள் கலைவளம் நல்கினாள் என்றும் கம்பரின் நாவில் கலைமகள் எழுதினாள் என்றும், வழங்கும் கதைகள் இதை விளக்குகின்றன. கிரேக்க நாட்டுக் காவிய ஆசிரியர் ஹோமர் என்பவரும், தாம் காவியம் பாடத் தெய் வமே முன் நின்று உதவியது என்றும், அத்தெய்வத்தினிட மிருந்தே சொற்கள் வந்து சேர்ந்து தம் வாயிலாக வெளிப் பட்டன என்றும் குறித்துள்ளார்.* அப் பாட்டுக்களின் ஆசிரியர் உணர்ந்தது போலவே, ஒருவகைத் தெய்வத் தன்மை கலந்து விளங்குவதாக மக்களும் உணர்ந்து போற்றினர். ஆகவே, பாட்டில் மட்டும் அல்லாமல், பாட்டின் கற்பனைநிகழ்ச்சிகளிலும் தெய்வத் தின் அருட் செயல் - அற்புதச் செயல் -கலந்து விளங்கு வதாக எண்ணினர். மக்கள் அவற்றைப் பற்றிக் கொண்ட வியப்புணர்ச்சி, அவ்வாறெல்லாம் வளர்ந்தது ;'மக்களுடைய முயற்சியைக் கடந்த தெய்வச் செயல்களாகவே யாவும் The ancient Greek poets said that their words came from the Muse... So Homer begins both the Iliad and the Odyssey with invoca. tions to the Muse, whether to sing of the wrath of Achilles or of the man of many wiles. So too Hesiod makes a similar claim when he says that he was taught poetry by the Muses, when he was keeping sheep on the slopes of Helicon. -C. M. Bowra, Heroic Poetry, p. 220.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/72&oldid=1681808" இலிருந்து மீள்விக்கப்பட்டது