உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காவியம் பற்றியனவாய் இருத்தலாகாது. 67 தோற்றம் அவ்வாறே இருந்த போதிலும், அவற்றின் அமைப்பு, பொதுவாக மக்கள் பலரும் உணரும் உணர்ச்சிகளாய், பல தலைமுறை வரையில் அவர்கள் கதை போல் போற்றிக் கற்பனை யின்பம் பெறத் தக்கனவாய் இருத்தல் வேண்டும். புலவர் இன்னார் இன்ன நிலையில் இன்னார்க்குப் பாடியது என்பது போய், யாரோ ஒருவர் பொதுவாக இன்ன வாழ்க்கையைப் பற்றி மக்களின் மகிழ்ச்சிக்காகப் பாடியது என்னுமாறு அமைய வேண்டும். அக நோக்காக இருந்து உணர்ச்சி இவ்வாறு கற்பனை கலந்து புற நோக்காக அமையும்போதுதான் காவியத்திற்கு உரிய அமைப்பு ஏற்படும் என்பர்.* தெய்வ அருள் காவியங்கள் கதை போல் சுவையான கற்பனையுடன் அமைய வேண்டும் எனினும், வரலாறு போல் மதிக்கத் தக்கனவாக விளங்க வேண்டும். அதனால்தான், பல நாடு களிலும் அத்தகைய பாட்டுக்களை இயற்றுவதற்குத் தெய் வம் துணை புரிந்தது அல்லது தூண்டியது என்பர்; அதை நம்பாதவர் தீமைக்கு இரையாவர் என்பர். தெய்வம் அடி யெடுத்துத் தந்தது என்றும், இயற்றியது என்றும்,

  • Heroic poets assume that their task is to give pleasure through their art, and they depict imaginary bards as doing this. For this reason heroic poetry is notably objective art. The pocts can think of no better entertainment than stories of great men and great doings.

-C. M. Bowra, Heroic Poetry, p. 29. To the authority of tradition some poets add the authority of inspiration by some divine power which it would be improper to ques- tion. Even Hesiod makes such a claim for himself when he says that the Muses appeared to him on Helicon and gave him a voice to tell of the past and the future. - Ibid p. 40-41.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/71&oldid=1681800" இலிருந்து மீள்விக்கப்பட்டது