உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

65

இலக்கிய மரபு தோன்றவில்லையா? சங்க காலத்தில் அவ்வாறு தோன்றா மைக்குக் காரணங்கள் என்ன? அல்லது, தோன்றியிருந்த பாட்டுக்கள் எளிதில் மறைந்தன எனின், அவ்வாறு மறைந்தமைக்குக் காரணங்கள் எவை? கிரேக்க நாட்டில் வீரர் பற்றிய தனிப் பாட்டுக்களும் தோன்றின ; நீண்டு தொடர்ந்த பெரும் பாட்டுக்களும் தோன்றிப் பரவின. முன்னவை குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின்போது சிலர்க்கு உரியனவாய் நிற்க, பின்னவை பொதுமக்களுக்காகப் பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்பட்டன என்பர்.* கையறுநிலைப் பாட்டுக்கள் புறநானூற்றில் காணப்படும் பாடாண் திணைப் பாட்டுக் களும் கையறுநிலைப் பாட்டுக்களும் (panegyrics and laments) அவ்வப்போது வாழ்ந்த புரவலராகிய வீரர் சிலருடைய வாழ்க்கையைப் பற்றிப் புலவர் உணர்ந்த உணர்ச்சிகளைப் பாடியவை. அந்த வாழ்க்கைகள் காவிய வளர்ச்சிக்கு உதவியிருத்தல் கூடும். ஆனால், அவை வரலாறு போல் குறித்த காலத்திற்கும் குறித்த இடத்திற்கும் உரியவை ஆயின. காவியமாக விளங்குவதற்கு உரிய பாட்டுக்கள், சிலருடைய உணர்ச்சிகளாய், குறித்த காலமும் இடமும்

  • Heroic poetry lives side by side with panegyric and lament and 'fulfils its own different function. While they are intended primarily for special persons and special occasions, it is intended for public gatherings and may be performed whenever it is asked for.

-C. M. Bowra, Heroic Poetry, p. 20. † None the less the resemblances between panegyric or lament and heroic poetry are so close that there must be a relation between them. Historical priority probably belongs to panegyric and lament, not merely because they are simpler and less objective, but because they exist in some societies where heroic poetry is lacking. - Ibid p. 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/70&oldid=1681865" இலிருந்து மீள்விக்கப்பட்டது