உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 இலக்கிய மரபு அவற்றில் தம் பெயரைப் பொறிக்க வேண்டிய தேவை உணரப்படவில்லை. ஒரு கால் பெயரைப் பொறிக்க நேர்ந்த போதும், தம் உண்மைப் பெயரைக் குறிப்பிடாமல் குடிப் பெயர் முதலியவற்றைப் பொறித்தல் உண்டு. அல்லது, தாம் வழிபடும் தெய்வத்தின் பெயரையோ தம் ஆசிரியரின் பெயரையோ அந்தக் காவியத்தில் வரும் சான்றோரின் பெயரையோ எழுதிவைப்பதும் உண்டு. அதனால், நூலின் ஆசிரியர் இன்னார் என்ற தெளிவு நமக்கு ஏற்பட முடியாமற் போகிறது. நூலாசிரியரின் பெயரும் வாழ்க்கைக் குறிப்பும் நமக்குத் தெரிவிப்பவற்றை விட, நூலில் உள்ள அவரு டைய கருத்துக்களும் நோக்கங்களும் நமக்கு அவரைப் பற்றி மிகுதியாகத் தெரிவிப்பதால், நம் உள்ளமும் அமைதி அடைகிறது. வீரப் பாட்டுக்கள் வீர வாழ்க்கை பற்றிய பாட்டுக்களை ஒருவர் பாட, பலர் ஆழ்ந்திருந்து கேட்பதே பழங்கால வழக்கம். அதனாலேயே பழைய காவியங்களில், பாடுவோர் மக்களை நோக்கிக் கூறு வன போன்ற குறிப்புக்கள் உள்ளன.* இளங்கோவடி களின் காவியத்திலும் இறுதியில், தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்...... மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென் என்று கேட்போரை விளித்துக் கூறும் முறை அமைந்திருத் தலும் கருதத் தக்கது. சில காவியங்களில், இன்னார்

  • Almost without exception, heroic poetry is in the first place intended not for a reading but for a listening public... Medieval French and Spanish epics abound in lines in which the poet addresses his public with such phases as " I shall tell you," or "you will see or "you have heard. -C. M. Bowra, Heroic Poetry, p. 215.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/64&oldid=1681818" இலிருந்து மீள்விக்கப்பட்டது