________________
காவியம் 61 இன்னார்க்குக் கூற, அவர் இன்னார்க்குக் கூற, அதைக் கேட்ட நான் உங்களுக்குக் கூறுகிறேன் என்று குறிப்புக்கள் இருத்தலும் காணலாம். காவியங்கள் ஒரு நாட்டில் தோன்ற வேண்டுமானால், அந் நாட்டு மக்கள் வீரத்தையும் மானத்தையும் போற்று பவர்களாக இருக்க வேண்டும் என்றும், வீரமும் மானமும் மிக்க தலைமக்களைச் சிறப்பித்துப் பாராட்டும் மரபு இருக்க வேண்டும் என்றும் கூறுவர். பழந்தமிழ் மக்களுக்கு இந்தப் பண்பும் இயல்பும் இருந்தன என்பதில் ஐயம் இல்லை. புற நானூற்றில் உள்ள பாட்டுக்கள் பல இதற்குச் சான்றாக உள்ளன. அக்காலத்து வேந்தர்களையும் வேளிரையும் போற்றிப் பாராட்டிய பாட்டுக்கள் பல அத்தொகுப்பில் உள்ளன. தான் ஒரு தவறும் செய்யவில்லை ஆயினும், மானத்தின் பொருட்டு உயிர்துறந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை, * ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்று உணர்ந்து எல்லா வற்றையும் பிறர்க்கு ஈந்து புகழ்பெற்ற பாரி, ஆய் முதலிய வள்ளல்கள், 'ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்' என்று கண்டு புகழெனின் உயிரும் கொடுக்கத் துணிந்து வாழ்ந்த குமணன் முதலான பெருமக்கள் ஆகிய பலரைப் படைத்திருந்த நாட்டில்,வீர வழி பாட்டுப் பாட்டுக்கள் பற்பல இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் அல்லியரசாணி மாலை முதலான நூல்களும் அண்மைக் காலத்தில் தேசிங்குராசன் கதை, கட்டபொம்மன் * புறநானூறு, 74. 110,127. † G 165.