உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 இலக்கிய மரபு நாட்டுப்பாடல் முதலியனவும் தோன்றக் கூடிய அளவிற்கு வீரவழிபாடு வழிவழியாக இருந்துவந்திருக்கிறது. ஆகவே, புறநானூற்றுப் பாட்டுக்கள் பிறந்த பழங் காலத்திலும் வீரவழிபாடு மிகுதியாக இருந்திருக்க வேண்டும். ஆயினும் சிலப்பதிகாரத்துக்கு முன், வேந்தரைப் பற்றியோ வேளி ரைப் பற்றியோ காவியங்கள் தோன்றாமலிருந்தது வியப் பாகவே உள்ளது. அவ்வாறு தொடக்கத்தில் வழங்கிய வீரப் பாட்டுக்களை ஒருவர் பாடிப் பலரை மகிழ்விக்கும் வழக்கம் இருந்த நிலையில், அந்த ஒருவர், பழக்க மிகுதியால், தாமே புதிய சில பாட்டுக்களை இயற்றிச் சேர்த்துப் பாடும் திறனும் பெற்றுவிடுவார். அந்தத் திறனால், அவர்காலத்துப் பாட்டுக்கள் திருத்தப் பெறுவது மட்டும் அல்லாமல், விரி வாக நீண்டு அமையவும் பெறும்.* இயற்றியவர் பெயர் தெரியாமல், மக்களால் பாடப்பட்டு வழங்கிவந்த பாட்டுக்களைத் தொகுத்து உருவாக்கும் முயற் சியில் புலவர் ஒருவர் ஈடுபடும்போது, அவருடைய பொறுப் புப் பெரிதாகின்றது. முழு உருவம் தரும் பொருட்டு, அவர் அந்தப் பாட்டுக்களோடு தாமே எழுதிச் சேர்ப்பவை பல உண்டு. சேர்த்துத் தொகுத்து எழுதும்போது அவர் மெல்ல மெல்லச் சீர்தூக்கி ஆராய்ந்து படிப்படியாக முயன்று செம்மையாக அமைப்பார்.

  • Much heroic poetry is not only recited, but actually improvised... The bard who recites a poem composes it in the act of recitation.

-C. M. Bowra, Heroic Poetry, p. 216. † A great change comes with the introduction of writing which allows a poet to compose with far greater care and with much more: time at his disposal. - Ibid p. 253-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/66&oldid=1681851" இலிருந்து மீள்விக்கப்பட்டது