________________
காவியம் 63' அந்தப் பெரும் புலவர் தோன்றி, பழைய வீர வாழ்க் கைக் கதைகளையும் குறிப்புக்களையும் தொகுத்து ஒழுங்கு. படுத்திச் செம்மையான காவிய வடிவம் தந்த பிறகு, மக்க ளிடையே சிதறுண்ட கதைகளும் பாட்டுக்களும் வழங்குவது நின்றுவிடும்.* ஆனால் இதற்கு விதிவிலக்கும் உண்டு. சிலப்பதிகாரம் அழகான காவியமாக உருப்பெற்ற பிறகும், நாட்டில் வெவ்வேறு வடிவில் கோவலன் கண்ணகி கதையும் பாட்டுக்களும் பல திரிபுகளோடு வழங்கிவந்தன. இலங்கைத் தமிழரிடை இன்றும் அத்தகைய பாட்டுக்கள் வழக்கில் உள்ளன. பாரதம் பெரிய காவிய வடிவம் பெற்றுத் தமிழில் எழுதப்பெற்ற பிறகும், அதன் சில பகுதிகள் அல்லி யரசாணிமாலை, புனந்திரன் தூது முதலிய பெயர்களால் நாட் டில் வழங்கிவந்தமை காணலாம். வரலாறு : காவியம் அத்தகைய பாட்டுக்களில் உள்ள எல்லாம் வரலாறாகக் கொள்ளத் தக்க நிகழ்ச்சிகள் என்று கூறல் இயலாது. வரலாற்றிற்கு உதவியான சான்றுகள் அவற்றில் உள்ளன எனலாம்; ஆயின், உள்ள எல்லாம் வரலாற்றுக் குறிப் புக்களே என்று கொள்வது பொருந்தாது. அவற்றை முதலில் இயற்றிப் பாடியவரும் பிறகு பாடிப் போற்றியவர் களும் கலையுணர்ச்சியும் கற்பனை வளமும் உடையவர்கள்; ஆகையால், அவர்களால் புனையப் பெற்ற பகுதிகளும்
- It is natura! that, after the epic poet has arrived, the crude epic: material in which he worked should scarcely be heard of. It could only be handed on by the minstrels themselves; and their audiences would not be likely to listen comfortably to the old piecemeal songs after they had heard the familiar events fall into the magnificent ordered pomp of the genuine epic poet. -L. Abercrombie, the Epic, p. 17.