நாடகம் 99 குறவஞ்சி பள்ளு ஆகிய இவற்றில் இத்தகைய பேச்சு வழக் குக் கொச்சைச் சொற்கள் பலவற்றைக் கலந்துள்ளனர். கெட்டி கெட்டி பெண்டுரெண்டு வைத்த குடும்பன் — செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே - ஊனமும் மானமும் இல்லா நன்னகர்ப் பள்ளி - உன்தன் ஓட்டை வாயை மூடெதிர்த்துப் போட்டி பண்ணாதே + முதலியவற்றில் காணலாம். கட்டியங்காரன் பழங்கால நாடகங்களில் கட்டியங்காரன் என்று ஒருவன் அமைவது மரபு. கதையில் வரும் மாந்தர்களை அறிமுகப் படுத்துவதும், அவர்களின் புகழ் பற்றியும் செயல் புற்றியும் விளக்குவதும் அவனுடைய கடமை. தேர்கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத் தீசர் பார்கொண்ட விடையில் ஏறும் பவனிஎச் சரிக்கை கூற நேர்கொண்ட புரிநூல் மார்பும் நெடியகைப் பிரம்பும் ஆகக் கார்கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன் வந்தான் t என்று புலவர் கட்டியங்காரனை அறிமுகப்படுத்துவதுஉண்டு.
- முக்கூடற் பள்ளு, 150.
† திருமலை முருகன் பள்ளு, 167. திருக்குற்றாலக் குறவஞ்சி, 10.