நாடகம் 101 விலாசம், சுபத்திரை கலியாணம் முதலானவைகளும் அக் காலத்தில் தோன்றியவைகளே. இரணியன், காத்தவராயன், குச லவர், ஜமதக்னி முதலானோரைப் பற்றிய கதைகளும் நாடகங்களாக எழுதப்பட்டன. தெருக்கூத்து பிற்காலத்தில் தமிழ் நாட்டில் நாடகங்கள் அறிஞரின் தொடர்பு குன்றியபோது, கலைச் சிறப்பு மங்கி, நயமும் நுட்பமும் குறைந்து, தெருக்கூத்து என்ற பெயருடன் வாழ்வன ஆயின. தெருக்கூத்தில் ஆடல்பாடல்கள் கலை மெருகு இல்லாதனவாக அமைந்தன; உரையாடல்களும் நாகரிகம் குறைந்து வழங்கின ; ஒருவகை முரட்டுத் தன்மை குடிகொண்டது எனலாம். ஆகையால் தெருக்கூத்திற்கு உரிய நாடகங்கள் இலக்கியமாக எழுதிப் போற்றத் தக்க சிறப்புப் பெறவில்லை. அவற்றில் உணர்ச்சி இல்லாமற் போகவில்லை; கற்பனை இல்லாமற் போகவில்லை ; ஆயின் அழகிய அமைப்பு இழந்து நின்றன எனலாம். ஆதலின் அவை படிக்காத மக்கள் மட்டுமே பாராட்டத் தக்கன ஆயின. நொண்டி நாடகம் பதினேழாம் நூற்றாண்டில் நொண்டி நாடகம் என்பது மக்களிடையே செல்வாக்குடன் விளங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழனி நொண்டி நாடகம், சீதக் காதி நொண்டி நாடகம் என்பவை எட்டுச் சுவடியாக உள்ளன. திருக்கச்சூர் நொண்டி நாடகம் அச்சிடப்பட்டது. இத்தகைய நொண்டி நாடகங்களில் வரும் தலைவன் நெறி தவறி நடக்கிறான் ; பரத்தையரோடு தொடர்பு கொண்டு ஒழுக்கக் கேடன் ஆகின்றான் ; உடல் நோயும் மன நோயும் 7
பக்கம்:இலக்கிய மரபு.pdf/105
Appearance