உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7 மரபு 187 தொல்காப்பியனார். குறளடி முதலியவற்றை வகுத்த போது எழுத்தெண்ணி அடிவகுத்தார். பிற்காலத்தே இவ் வகையில் வேறுபாடு நேர்ந்தது. சீர்பற்றியும் அடிபற்றியும் இருவகையாலும் குறளடிமுதலிய பெயர்கள் வழங்கலாயின. பாட்டுப் போல் வருவதைப் 'பண்ணத்தி' என்று குறித்தார் தொல்காப்பியனார். பிற்காலத்தில் பாவினம் என்று தனியே பிரித்து அதனைத் தாழிசை துறை விருத் தம் எனப் பாகுபாடு செய்தனர். இம் மூன்றனுள்ளும் விருத்தம் மிக விரிவாக வளர்ந்து, இன்று தமிழ்யாப்புவகை களுள் சிறப்பிடம் பெற்றுள்ளது. பொருளும் யாப்பும் இன்ன இன்ன பொருள் பற்றிப் பாடும்போது இன்ன இன்ன யாப்பில் அமைதல் மரபு என்றும் தொல்காப்பியனார் விளக்கியுள்ளார். அம்மரபுகள் பிற்காலத்தில் படிப்படியே கைவிடப்பட்டன. எடுத்துக்காட்டாக, "வழிபடு தெய்வம் உன்னைக்காக்க, நீ பழியற்ற செல்வத்தோடு மேன்மேலும் சிறப்புற்று விளங் குக' என்று ஒருவனை வாழ்த்துவது புறநில வாழ்த்து எனப்படும், அப்பொருள் பற்றிய பாட்டு, ஆசிரியமாகவும் வெண்பாவாகவும் அமையலாம், கலியாகவும் வஞ்சியாகவும் அமைதல் கூடாது என்றார். கடுமையான சொற்களாயினும் பிறகு நல்ல பயன் விளை யும் என்று ஒருவனுக்கு உண்மையை உள்ளத்தே பதியுமாறு

  • தொல்காப்பியம், பொருள், செய்யுளியல், 31.

யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, ± செய்யுளியல், 178. செய்யுளியல், 109. 159

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/191&oldid=1681907" இலிருந்து மீள்விக்கப்பட்டது