உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

186 இலக்கிய மரபு பொருள் புறப்பொருள் பற்றிய மரபுகள் பெரும்பாலும் உள்ளன. மரபுக்கு ஒட்டாமல் வருவனவும் சில உள்ளன. குறிஞ்சி நிலத்தையும் அதற்கு உரிய பெரும்பொழுது சிறுபொழுதுகளையும் அந்நிலத்துக் கருப்பொருள்களையும் பின்னணியாக அமைத்துக் காதலரின் கூடல் ஒழுக்கம் பற்றிப் பாடிய பாட்டுக்கள் உள்ளன ; சில பாட்டுக்களில் நெய்தல் நிலத்தையும் அந்நிலத்துக் கருப்பொருள்களையும் அமைத்துக் கூடல் ஒழுக்கம் பாடப்பட்டுள்ளது. இவ்வாறே புறத்திணையில் சிறிது வேறுபட்டுவருவனவும் உள்ளன. அதனால் பிற்காலத்து இலக்கணம் வகுத்தவர் புறத்திணை ஏழு எனக் கொள்ளாமல் பன்னிரண்டு எனக் கொள்ள இடமாயிற்று. வடிவம் பற்றிய மரபுகள் வடிவம் பற்றிய மரபுகளை எடுத்துரைக்குமிடத்தில் தொல்காப்பியனார் முதலில் ஒலியளவும் எழுத்தும் பற்றி எழுத்ததிகாரத்தில் கூறியதை நினைவூட்டினார். * இலக்கியம் பொருள் உணர்த்தும் ஒலிகளையும் எழுத்துக்களையும் கொண் டது; அதாவது, சொற்களையும் சொற்றொடர்களையும் கொண்டது; அவை பற்றிய மரபுகள் பலவற்றைச் சொல் லதிகாரத்திலும், சிலவற்றைப் பொருளதிகாரத்து மரபியலி லும் கூறினார். ஆதலின் அவற்றை விட்டு, இங்குச் செய் யுளுக்கு உரிய யாப்பை உணர்த்தத் தொடங்கி அசை, சீர், அடி,தளை, தொடை, பாவின் ஓசை ஆகியவற்றை விளக்கி னார். இவற்றுள்ளும் சில பிற்காலத்தே மாறின. நேர்பு நிரைபு என்னும் அசைகளைப் பிற்காலத்தார் கொள்ள வில்லை. நாற்சீர் கொண்டது அடி எனப்படுமே' என்றார் * தொல்காப்பியம், பொருள், செய்யுளியல், 2. ர் - மரபியல். + ஷை- செய்யுளியல், 4.எழுத்துணரியாக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/190&oldid=1681914" இலிருந்து மீள்விக்கப்பட்டது