________________
மரபு 185 கூடல் முதலியவற்றை உரிப்பொருள் எனக் கொண்டது மிகப் பொருந்துவதாகும்.* அகப் பொருளையும் புறப்பொருளையும் பற்றித் தொல் காப்பியர் கூறியுள்ள மரபுகளைப் பெரும்பாலும் சங்க காலத் துப்பாட்டுக்களில் காணலாம். சங்கப் பாட்டுக்களாக இன்று நமக்குக் கிடைப்பவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும்.எட்டுத்தொகையுள் புறநானூறு அகநானூறு முதலி யவற்றில் சிலபாட்டுக்கள், தொல்காப்பியனாரின் காலத்துக்கு முன் பாடப்பட் டிருக்கலாம் ; பல அவர்காலத்துக்குப் பின் பாடப்பட்டவை. கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற் றாண்டில் தமிழ்நாட்டில் மூலை முடுக்கில் இருந்த பாட்டுக்கள் எல்லாம் புரவலர் சிலருடைய ஊக்கத்தாலும் புலவர் சில ருடைய முயற்சியாலும் தொகுக்கப்பட்டன. அத் தொகுப்பு முயற்சிக்கு எட்டாமலே ஒதுங்கியிருந்து மறைந்து போன பாட்டுக்கள் பல இருந்திருக்கும். முயற்சிக்கு எட்டிய போதிலும், விரிவிற்கு அஞ்சி வேண்டா என விடப்பட்ட பாட்டுக்கள் பல இருந்திருக்கும். டுள்ள இவ்வாறு விடப்பட்டவை போகத் தொகுக்கப்பட் பாட்டுக்களில் தொல்காப்பியனார் கூறிய அகப் Life is determined not principally by outward facts and circum- stances, nor yet by thought and speculation, but by its emotions. Emotions are motives, as their name implies; they induce the will; they decide the whole current of life. -C. T. Winchester, Principles of Literary Criticism, p.48. " இவ்விலக்கியங்களின் திருந்திய வடிவங்களையும் செய்யுளழகுகளையும் முதிர்ந்த பக்குவத்தையும் நோக்குமிடத்து, கிருஸ்துவாப்தத்திற்கு மிக மிக முற்பட்ட காலத்தே தமிழிலக்கியங்கள் உருப்பெறத் தொடங்கியிருத்தல் வேண்டுமென்று எளிதில் ஊகித்தல் கூடும்' எஸ். வையாபுரிப் பிள்ளை, இலக்கணச் சிந்தனைகள், ப. 31.