________________
பாகுபாடு 43 மிதத்தலை விட்டு, கற்பவர்க்கு உண்மையை விளக்குவதில் ஈடுபடுகிறார் என்பர்.* கற்பனையில் மிதப்பதாகிய இலக்கியத்தைச் (romantic literature) சிலர் குழந்தைத் தன்மையான இலக்கியம் என்று புறக்கணிப்பர். குழந்தை போல் வேடிக்கை விநோதங்களைக் கண்டு மயங்கி இன்புறும் மனம் உடையவர்களுக்கு மட்டுமே அது ஏற்ற இலக்கியம் என்றும், அறிவு வளர்ச்சி பெற்ற மக்கள் விரும்பத் தகாத்து என்றும் அவர்கள் ஒதுக்குவர். ஐரோப்பாவில் கற்பனை இலக்கியம் மிகுந்திருந்த நிலை யில், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் உண்மை யியலுக்கு ஒரு புதிய ஆர்வம் பிறந்தது. பொதுவாகச் சென்ற நூற்றாண்டின் சிறப்பியல்பு எனக் கூறத் தக்க வகையில் அது சிறப்புற்று அமைந்தது. இந்நூற்றாண்டி லும் அதுவே மிக்கு விளங்குகிறது எனலாம். நீதி நூல் நீதியை உணர்த்தும் நூல்களிலும் புலவர் உணர்ச்சி யும் கற்பனையும் நிறைந்த கலை மனப்பான்மையுடன் எழுது வனவே இலக்கியம் (didactic (terature) ஆவன. அத் தகைய நூல்களில், நீதியை உணர்த்தும் செய்யுட்கள் எல்லாம் பாட்டு ஆவதில்லை. அவற்றுள் இனிய ஓசை மட்டும் அமைந்து, உணர்ச்சியும் கற்பனையும், இல்லாதவை பாட்டுக் கலையின்பாற் படுவன அல்ல.
- To regard literature as the expression of the author's mind (or mood or temperament) emphasises the subjective clement in it and thus leads ultimately to romanticism; in which what the author felt is the important thing. The opposite way of regarding Kiterature, as a method of representing things to the reader, emphasises the objective element, and thus leads ultimately to realism..
-L. Abercrombie, Principles of Literary Criticism, pp. 23-24.