________________
நாவல் 131 கதைகளிலிருந்து அமைத்ததாக இருக்கலாம் ; அல்லது, அன்றாட வாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுத்ததாக இருக்க லாம்; அல்லது, ஆசிரியரின் சொந்த அனுபவத்திலிருந்து அமைத்ததாகவும் இருக்கலாம். பிரெஞ்சு நாட்டார் ஒருவர் எல்லா இலக்கியங்களையும் ஆராய்ந்து, முப்பத்தாறு வகை யான கதைக் கருக்களே இருப்பதாக இருக்க இயலும் என்று குறித்துள்ளார்.* ஆனால்,நாடகங்களும் கதை களும் கணக்கற்றவை உள்ளனவே என்றால், அந்தச் சில வற்றோடு கலைஞர் பலருடைய உணர்ச்சி யனுபவங்கள் கலந்து பலவேறு வகையாகப் பல்கின எனலாம். கருவும் நிகழ்ச்சியும் பலவகையாக அமைவது உண்டு. நிகழ்ச்சிகள் பல ஆங்காங்கே நிகழலாம். அவற்றினிடையே தொடர்பு இல்லாமல் இருக்கலாம்; எல்லாம் சேர்ந்து ஒருங்கே அமையும் ஒருமையும் இல்லாமல் இருக்கலாம். இத்தகைய நிகழ்ச்சிகளோடு அமையும் கருவும் கதையில் உண்டு. நிகழ்ச்சிகள் பலவாக அமையினும், ஒன்று மற்றொன் றிற்குக் காரணமாய்த் தொடர்புற்று நிற்க கதையின் கரு அவற்றால் விளக்க முறுதலும் உண்டு. கதை கவர்ச்சியுடையதாக அமைவதற்குக் கருவும் காரணமாக அமையலாம்; கதை மாந்தரின் பண்பும் காரண மாக அமையலாம். ஒரு கதையை அதன் கருவின் கவர்ச்சி பற்றிப் போற்றுவோம்; அதில் வரும் கதை மாந்தரின் பண்பு நம் உள்ளத்தைக் கவர்ந்திருக்கலாம்.. மற்றொரு கதையின் கரு நன்கு அமைந்திருக்காது; கதை மாந்தர் கம் உள்ளத்தைக் கவர்ந்திருக்கலாம். இவ்வாறு அன்றி, கருவின் சிறப்பும் கதை மாந்தரின் சிறப்புமாகிய
- J. M. Murry, The Problem of Style, p. 31.