உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 133 நாவலில், உரையாடல் இன்றியமையாத ஓர் உறுப் பாகும். ஏறக்குறைய நாடகத்தில் அமைவது போலவே இங்கும் உரையாடல் சுவைபட அமைதல் வேண்டும். நாவலின் கதை விளக்கத்திற்கு அது உதவுதல் வேண்டும்; கற்பனைமாந்தரின் பண்பு விளக்கத்திற்கும் உதவுதல் வேண்டும்; அவற்றிற்கு வேண்டாத உரையாடல் மிகை என்றும், வீண் என்றும் ஒதுக்கப்படல் வேண்டும். வேறு வகையில் சுவையாக இருப்பினும், இது இந்த நாவ லுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கப்படல் வேண்டும். மனிதரின் வாழ்வில் உள்ள பேச்சுமுறையை ஒட்டியே உரையாடல் அமைதல் வேண்டும். ஆனால் மனிதர் பேசுவன எல்லாவற்றையும் நாவலில் அமைக்கத் தேவை யில்லை. கதையின் போக்கிற்கு வேண்டிய அளவில் இயல் பாக அமையும் பேச்சை மட்டும் நாவலில் அமைக்கலாம். எண் சுவை காவியத்தில் அமைதல் போலவே, நாவலிலும் எண் வகைச் சுவையும் அமையலாம்; அல்லது, நகைச்சுவையும் அவலச்சுவையும் மற்றும் இரண்டொரு சுவையும் சிறப்பாக அமையலாம். நாவலின் முடிவு இன்பமாகவோ துன்ப மாகவோ அமையலாம். நகைச்சுவை அமைப்பதில் ஆசிரி யர் சிலர் வல்லவராக இருத்தல் கூடும்; சிலர் அவலச் சுவையை (துயாத்தை) அமைத்தலில் வல்லவராக இருத் தல் கூடும்; எள்ளல் சுவையை அமைத்தலில் வல்லவரும் உண்டு. ஆயின், எதிலும் நுட்பமான திறன் விளங்க அமைத்தல் சிறப்பாகும். காவியத்தில், நாடு நகரம் முதலியவற்றின் வருணனை யும், இயற்கையின் வருணனையும் அமைதல் போலவே, நாவலிலும் அமைதல் வேண்டும். ஆனால், அவை வேண்டு மென்றே அலங்காரத்திற்காக அமைக்கப்படாமல், அங்கு 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/137&oldid=1681997" இலிருந்து மீள்விக்கப்பட்டது