________________
86 இலக்கிய மரபு நகைச்சுவையான பேச்சுக்களும், கற்றறிந்தவர்க்கு வேண்டிய கருத்துக்களும் உரையாடல்களும், இளைஞர்க்கு வேண்டிய காதற் பகுதிகளும், எல்லோர்க்கும் வேண்டிய ஆடல்பாடல் களும் என்று இவ்வாறு அவரவர்க்கு வேண்டியவற்றை எல்லாம் கலந்து கலைவிருந்து அளித்தமையால்,* அவர் சிறந்து நாடக ஆசிரியராக முன்னேற முடிந்தது. சேக்ஸ்பியர் அக் காலத்துச் செல்வரும் கற்றோரும் மகிழ்வதற்காகவும், பொதுமக்களின் மனத்தில் எளிதில் பதிவதற்காகவும், நாட்டில் வழங்கிய பழைய கதைகள் பல வற்றை நாடகமாக்கி நடிக்கச் செய்தார். ஆயினும் அந்த நாடகங்களில், தம் காலத்து மக்களின் வாழ்க்கையின் உணர்ச்சிகளையும் ஆசைகளையும் போராட்டங்களையுமே அமைத்து வெற்றி பெற்றார். வாழ்க்கையை நன்றாக ஆராய்ந்து, அதன் இயல்புகள் நாடகங்களில் விளங்குமாறு செய்தாரே அல்லாமல், வெறுங் கதைகளை மட்டும் காட்டி, வாழ்க்கையோடு ஒட்டாத கற்பனைகளை அமைத்துத் தரவில்லை. நகைச் சுவை ஆழ்ந்த உணர்ச்சிகளை உடைய நாடகத்தை இக்காலத் திலும் மக்கள் விரும்பிப் போற்றுகின்றனர். ஆயினும், நகைச்சுவையையே மிகுதியாக விரும்புகிறார்கள்.ஆகையால், Shakespeare is always greatly aware of his own Elizabethan audierce, that mixed bag of aristocrats, wits, gallants, cut-purses, sailors and soldiers on leave, schoolboys and apprentices...... This audience had to be given what it wanted, and, being a mixed bag, it wanted a variety of things-action and blood for the unlettered, fine phrases and wit for the gallants, thought and debate and learning for the more scholarly, subtle humour for the refined, boisterous clowning for the unrefined, love-interest for the ladies, song and dance for every- body. Shakespeare', it ngs. -J. B. Wilson, English Literature, pp. 98–99.