உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பந்தர் அருளால் 52 மன்னன் கூன்பாண்டியன் வெப்ப நோயும், நீங்கப்பெற்றுச் சைவன் ஆனான். மக்களும் சைவ நெறியைப் பின்பற்றினர். பாண்டிய நாட்டில் சைவம் மறு மலர்ச்சி பெற்று, மங்கையர்க்கரசியால் நிலைத்த புகழுடன் திகழ்ந்தது. இந்நிகழ்ச்சிகளைப் பொறாது, சமணர் பலவாறு இடையூறு செய்தனர். வேற்றரசர்களின் உதவியால் மாய் வேள்விகளை நடத்தி, பெரியதொரு யானையை ஏவி மதுரையை அழிக்க முயன்றனர். பாண்டியன் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் சமணர் விடுத்த யானையை அம்பால் எய்தார். யானை இறந்து ஒரு மலையாக மாறியது. அதுவே மதுரை மேலூர்ச் சாலையி லுள்ள யானைமலையாகும். . தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாது, சமணர் மற்று மொறு வேள்வி நடத்தினர். பெரியதொரு நாகத்தை ஏவினர். பாண்டியன் அந்த நாகத்தைக் கொன்று மதுரையைக் காத்தான். இறந்துபோன நாகமே இன்றைய மதுரைப் பல்கலைக்கழக வட்டாரத்திலுள்ள 'நாகமலை' ஆகக் காட்சியளிக்கிறது. தொடர்ந்து சமணர் செய்த சூழ்ச்சிகளின் விளைவாகச் சிவபெருமான் திருவிளையாடல்களால் பசுமலை, அழகர் கோயில் முதலிய மலைகள் உண்டாயின என்று "திருவிளையாடற்புராணம்" கூறும். பலமுறை தோல்வியடைந்த சமணர் மீது மக்கள் கொதித்து எழுந்தனர். அரசனின் எதிர்ப்பும் ருந்தது. எண்ணாயிரம் சமணர் கழுவேற்றப்பட்டனர். அதனால் சமணர் பலர் சைவசமயத்துக்கு மாறினர். எஞ்சியவர்கள் மதுரைப் பகுதியை விட்டு ஓட்டம் பிடித்தனர். திருச்சி, திருக்காட்டுப்பள்ளி. கருந்தட்டான்குடி, பள்ளி அக்கிரகாரம் (தஞ்சாவூர்) பகுதிகட்குச் சென்றனர். தீபங்குடி, வேதாரண்யம் முதலிய ஊர் கட்குச் சென்ற சிலர் இன்றளவும் சமணராக வாழ்கின்றனர். சமணம் பாண்டிய நாட்டில் கடுமையாக ஒடுக்கப்பட்டதால், தங்கள் முன்னோர்கள் மதுரையிலிருந்து துரத்தப்பட்டவர்கள் என்று கர்ண பரம்பரையாகக் கூறப்படுவதை அவர்கள் இந்நூல் ஆசிரியரிடம் தெரிவித்தனர். . • சமணர் சிலர் மதுரையிலிருந்து சிரவணபெலகோலாவிற்கே திரும்பிச் சென்றனர் என்றும் தெரிகிறது. 12-ஆம் நூற்றாண்டு