36 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் இறக்குமதியில் மூன்றில் இருபகுதி. இக் கப்பலின் நீளம் 1031 அடி; அகலம் 118 அடி; உயரம் 135 அடி முதல் 234 அடி வரையில். இக்கப்பலில் இயந்திரத் திலும் அமைப்பிலும் 50,000 டன் எடையுள்ள உலோகங்களும், ஒரு கோடி ஆணிகளும் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன. இக்கப்பலைத் துறை முகத்திற் கட்டுவதற்குப் பயன்படுத்தும் சங்கிலி யின் எடை 2,000 டன்! எண்ணெயால் ஓட்டப்படும் 26 'லைப்போட்கள்' (Tife boats) உள்ள போட் டெக், டென்னிஸ் விளையாடுமிடமுள்ள ஸ்போர்ட்ஸ் டெக், உலாவுவதற்கேற்ற சன் டெக், கட்டணமின் றித் திரைப்படங்கள் காட்டும் இரண்டு தியேட்டர் களுள்ள பிராமினாட் டெக், கடைகளும் பர்சரின் அலுவலகங்களும் உள்ள மெயின் டெக், இன்னும் A டெக், B டெக், டெக், டெக், Rடெக் முத லிய 14 மாடிகளும், மின்சாரத்தால் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலுஞ் செல்ல உதவும் 35 (Lifts) கருவிகளும், நிழற்படம் எடுக்கும் நிலையமும் இக் கப்பலில் உள்ளன. செய்திப் படங்கள், கேலிச்சித் திரப் படங்கள், குழந்தைகளுக்கான படங்கள் இவைகளும் கப்பலிலுள்ள திடேட்டரில் காட்டப் பட்டன. நான் என் வாழ்நாளிலேயே, இக்கப்பலில் தான் நோட்கள் தொடர்ந்து படம் பார்த்தேன். இதன் பதினான்கு மாடிகளிலும் நடந்தால் சென்ற வழியில் மீண்டும் செல்லாமலே 22 மைல்கள் நடக்க இயலும்! இத்துணைப் பெரிய கப்பலைக் கண்ணுற்ற வுடன் நான் திகைப்புற்றதில் வியப்பென்ன? . பர்(Patter) - கப்பல கணக்குகள் வைத்திருக்கும் லுவலாளர்.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/42
Appearance