உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.குயின் எலிசபத் 1 எனது ஆறுமாதகால ஆழிசூழ் உலகச் சுற்றுப் பிரயாணத்தில், மிகச் சிறந்ததும், உள்ளக்கிளர்ச்சி யும் உவகையும் தந்ததும், ஆறு நாட்கள் அட்லாண் டிக் பெருங்கடலில் குயின் எலிசபத் கப்பலில் நான் கழித்ததேயாம். சதாம்ப்டன் துறைமுகம் 1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி, தீபாவளியன்று, இரவு 7 மணிக்கு லண்டன் வாட்டர்லூ ரயில் நிலையத்துக்கு வந்தேன். குயின் எலிசபத் கப்பலில் அமெரிக்காவுக்குச் செல்லும் பிரயாணிகட்கென, அக் கப்பலின் உரிமையாளர் களான குனுர்டு வயிட் ஸ்டார் கம்பெனியார் 'புல்மன் " ரயில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ரயிலில் 80 மைல் தொலைவிலுள்ள சதாம்ப்டன் துறைமுகத்துக்கு ஒன்றரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தேன். . தண் முறைப்படி சுங்க அலுவலாளர்கள் சில சடங் குகள் செய்தபின், கப்பலை அடைந்தேன். இக் கப்பலின் பெருமையைப்பற்றி எவ்வளவோ கேட் டும் படித்துயிருந்தும், இதிற் கால்வைத்தவுடன் எனக்கு ஒரு புத்துணர்ச்சி உண்டாயிற்று. இக்கப்பலின் அமைப்பு குயின் எலிசபத் உலகிற் பெரிய கப்பல். இதனுடைய அதாவது, இந்தியாவின் உன்; i அட்டைப்படம் பார்க்க. எடை 88,673 ராண் 2 புல்ான் என்பது உணவுச்சாலையும் ஏனைய வசதிகள் பலவும் உள்ள ரயில். இந்த ரயில்கள் புல்மன் கம்பெனியைச் சேர்ந்தவை.